Motorola Edge 70 Max: ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் (Mobile market) தங்களது பிரீமியம் லுக் மற்றும் கிளீன் சாஃப்ட்வேர் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்த மோட்டோரோலா நிறுவனம், இப்போது பிளாக்ஷிப் பிரிவில் (Flagship) ஒரு புதிய அதிரடி ஆட்டத்தைத் தொடங்கப் போகிறது.
சந்தையில் சாம்சங் மற்றும் ஒன்ப்ளஸ் நிறுவனங்களுக்குப் பெரிய சவாலாக அமையப்போகும் புதிய Motorola Edge 70 Max ஸ்மார்ட்போனின் முக்கிய விபரங்கள் இப்போது இணையத்தில் கசிந்துள்ளன.
இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒட்டுமொத்த மொபைல் உலகிலும் தற்சமயம் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. நெக்ஸ்ட் லெவல் பெர்பாமன்ஸை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு (Users), வரும் நாட்களில் அறிமுகமாக உள்ள இந்த புதிய போன் ஒரு மிகச்சிறந்த சாய்ஸாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
Motorola Edge 70 Max Renders
மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் டிசைன் விபரம்: இணையத்தில் லீக்காகியுள்ள மார்க்கெட்டிங் படங்களின்படி, இந்த புதிய போன் மிகவும் மெலிதான மற்றும் பிளாட் மெட்டல் ஃபிரேம் டிசைனுடன் வெளிவரப்போகிறது.
இதன் பேக் பேனலில் சதுர வடிவிலான கேமரா மாட்யூல் கொடுக்கப்பட்டுள்ளதுடன், அதில் மூன்று கேமரா லென்ஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் லைட் ஆகியவை கச்சிதமாக இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்த போன் கிளேசியர் புளூ, ஆனிக்ஸ் பிளாக் மற்றும் சேஜ் கிரீன் ஆகிய மூன்று கலகலப்பான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவும் படியுங்கள்: ஜூன் 29 லான்ச்.! மிரட்டலான விலையில் Samsung M47 5G போன்!
Motorola Edge 70 Max Specifications Leaked Online
மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் அம்சங்கள்: முக்கியமாக, ஆன்லைனில் கசிந்துள்ள விபரங்களின்படி இதில் குவால்காம் நிறுவனத்தின் அதிரடி சிப்செட்டான Snapdragon 8 Gen 5 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
முன்பக்கத்தில் மெலிதான பெசல்களுடன் கூடிய பிளாட் AMOLED டிஸ்ப்ளே மற்றும் மையத்தில் பஞ்ச்-ஹோல் செல்ஃபி கேமரா டிசைனும் வழங்கப்பட்டுள்ளது.
போட்டோகிராபி பிரியர்களுக்காக, இதில் 50MP Sony Lytia மெயின் கேமரா ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) தொழில்நுட்பத்துடன் பக்காவாகக் களமிறங்குகிறது.
இதுவும் படியுங்கள்: Nothing Phone 4b Launching தேதி ரெடி.! வெளியான அதிரடி தகவல்!
Motorola Edge 70 Max Leaks
மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் கூடுதல் விபரங்கள்: இதுதவிர, இந்த போன் ராணுவ தரம் வாய்ந்த MIL-STD-810H சான்றிதழுடன் வருவததால், போனின் உழைப்பும் பாதுகாப்பும் மிகவும் தடிமனாக இருக்கும்.
சார்ஜிங் வசதியைப் பொறுத்தவரை, இதில் பிரத்யேகமான மேக்னடிக் Qi2 வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் இருக்கும் என்பது இந்த லீக்ஸ் மூலம் உறுதியாகியுள்ளது.
எனவே வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும்னு சொல்ற மாதிரி, பட்ஜெட் விலையில் அதிரடியான சாஃப்ட்வேர் பெர்பாமன்ஸ் மற்றும் தரமான கேமராவை எதிர்பார்க்கும் மக்களுக்கு, இந்த புதிய மோட்டோரோலா மொபைல் தற்போதைய சந்தையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தப் போகும் மாஸ் சாய்ஸ் (Mass choice) ஆகும்!
இந்த போன் குறித்த முழுமையான லான்ச் தேதி மற்றும் விலை விபரங்களை அறிய விரும்பும் பயனர்கள், வரும் நாட்களில் மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் முழு விபரம் முழுவதையும் தெரிந்து கொள்ளலாம்.

