Xiaomi 18 Pro Leaked : சாம்சங்கிற்கு நேரடி சவால்.! சியோமியின் மாஸ் டிஸ்பிளே!

Xiaomi 18 Pro Leaked Tamil: சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா போன்ற பிரைவசி டிஸ்பிளே மற்றும் 2K திரையுடன் வரவிருக்கும் புதிய சியோமி 18 ப்ரோ விபரம்.
Xiaomi 18 Pro Leaked 2K Screen and Privacy Protection Feature Tamil

Xiaomi 18 Pro Leaked
விபரங்களின்படி, சியோமி நிறுவனத்தின் அடுத்த தலைமுறை முதன்மை ஃபிளாக்ஷிப் லினப் (Flagship lineup) தொடராக இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த மாஸ் மொபைல் உலகளவில் அறிமுகம் செய்யப்படலாம் எனத் தற்சமயம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய சீரிஸ் (Series) வரிசையில் Xiaomi 18Xiaomi 18 Pro மற்றும் Xiaomi 18 Pro Max ஆகிய மூன்று மாடல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே (Display) மற்றும் கேமரா அம்சங்கள் ஆன்லைனில் கசிந்து இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Xiaomi 18 Pro Leaked

ஆப்பிள், சாம்சங்கிற்கு நேரடி சவால் விடும் சியோமியின் மாஸ் டிஸ்பிளே:
பிரபலா சீன டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வெளியிட்டுள்ள Xiaomi 18 Pro Leaked தகவல்களின்படி, சியோமி நிறுவனம் தற்போது தங்களது புதிய ஃபிளாக்ஷிப் போனில் அடுத்த தலைமுறை 2K ரெசொலூஷன் டிஸ்பிளேவை (2K Resolution Display) தீவிரமாகச் சோதனை செய்து வருகிறது. இது சியோமி 18 ப்ரோ மாடலாகத்தான் இருக்கும் என மொபைல் மார்க்கெட் (Mobile market) வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.

மேலும், இதில் வரவிருக்கும் மிக முக்கிய பாதுகாப்பு அம்சம் (Security feature) ஒட்டுமொத்த டெக் உலகையும் தற்சமயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Galaxy S26 Ultra) மாடலில் அறிமுகம் செய்யப்படவுள்ள அதிநவீன பிரைவசி பாதுகாப்பு வசதியை (Privacy Protection Feature) சியோமியும் தங்களது புதிய போனில் சோதித்து வருகிறது.

இதன் மூலம், நமக்கு அருகில் இருப்பவர்கள் நமது மொபைல் ஸ்கிரீனில் (Screen) இருக்கும் முக்கிய விபரங்களை பக்கவாட்டில் இருந்து பார்க்க முடியாதபடி ஆன்டி-பீப்பிங் ஷீல்டு (Anti-peeping shield) சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் தொழில்நுட்பம் கச்சிதமாக வடிவமைக்கப்பட உள்ளது. சாம்சங்கிற்கு அடுத்தபடியாக இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இரண்டாவது பிராண்ட் சியோமி என்பது குறிப்பிடத்தக்கது.

Best Premium Smartphone Deals

மிரட்டலான 200MP லோஃபிக் கேமரா மற்றும் வெளியீட்டு விவரம்:
நவீன கேமரா சென்சார்களை விரும்பும் நுகர்வோருக்கு, இந்த Best Premium Smartphone Deals வரிசையில் சியோமியின் புதிய கேமரா தொழில்நுட்பம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையப் போகிறது. புதிய சியோமி 18 சீரிஸ் போன்களில் லோஃபிக் (LOFIC Technology) தொழில்நுட்பத்துடன் கூடிய மிரட்டலான 200 மெகாபிக்சல் பிரைமரி கேமரா (200MP Primary Camera) கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக மற்றொரு டிப்ஸ்டரான ஸ்மார்ட் பிகாச்சு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் பின்புறத்தில் முந்தைய மாடல்களைப் போலவே ஒரு சிறிய பிரத்தியேக ரியர் ஸ்கிரீன் (Rear Screen) மாற்றமின்றி வரவுள்ளது. ஆனால், இதன் டிஸ்பிளே பிரைட்னஸ் (Brightness) அளவுகள் அசுரத்தனமாக உயர்த்தப்பட்டு, ஒட்டுமொத்த விஷுவல் எக்ஸ்பீரியன்ஸ் (Visual experience) ஆப்பிள் ஐபோன் போன்ற பிரீமியம் தரத்தில் (Apple-like Visuals) இருக்கும் எனத் தகவல்கள் கூறுகின்றன.

இம்முறை சியோமி தனது வழக்கமான லான்ச் ஸ்ட்ராட்டஜியை (Launch strategy) மாற்றி, ப்ரோ மாடல்களை முதலில் செப்டம்பர் (September Launch) மாதத்திலேயே அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


எனவே, வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும்னு சொல்ற மாதிரி, அசுர வேக பிராசஸர் (Processor), ஐபோன் போன்ற டிஸ்பிளே மற்றும் சாம்சங் தரத்திலான பிரைவசி ஸ்கிரீன் அம்சங்களை ஒரே போனில் எதிர்பார்க்கும் பிரீமியம் பயனர்களுக்கு, இந்த சியோமி 18 ப்ரோ மாடலானது வெச்சி செஞ்சிட்டாங்கன்னு சொல்லும் அளவுக்கு தற்போதைய மொபைல் சந்தையில் வரவிருக்கும் ஒரு மிகச்சிறந்த அட்டகாசமான மாஸ் சாய்ஸ் (Mass choice) ஆகும்!

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக