Family Card Address Change: ரேஷன் கார்டு முகவரி மாற்றும் வழி

Tamil Nadu Family Card Address Change Apply Online: ரேஷன் கார்டில் புதிய முகவரியை மாற்ற தாலுகா ஆபீஸ் செல்லாமல் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் எளிய வழி

Tamil Nadu government official TNPDS smart ration card address change online application process step by step guide with required documents explained in Tamil

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ஆன்லைன் மூலமாக Tamil Nadu Family Card Address Change Apply Online சேவையைப் பயன்படுத்தி, தாலுகா ஆபீஸ் செல்லாமல் தங்களது முகவரியை மிக எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். பொதுவாக, ஒரு வாடகை வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு maarumபோதோ அல்லது புதிய சொந்த வீடு வாங்கி குடியேறும்போதோ, ரேஷன் கார்டில் முகவரியை மாற்றுவது மிக முக்கியமான வேலையாகும்.

இதற்காக முன்பு போல தாலுகா ஆபீஸிற்கு அலைந்து திரிந்து, நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. பொதுமக்கள் தங்களது மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டர் மூலமாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக மிக எளிதாக முகவரியை மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ இணையதள வழிமுறைகள் மற்றும் என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்த துல்லியமான வழிகாட்டுதலைத் தொடர்ந்து கீழே விரிவாகப் பார்க்கலாம்.

Smart Card Address Change Required Documents

புதிய முகவரிக்கு விண்ணப்பிக்கும் முன், உங்களிடம் புதிய முகவரிக்கான ஏதேனும் ஒரு அதிகாரப்பூர்வ சான்றின் நகல் (ஸ்கேன் செய்யப்பட்ட காப்பி) கைவசம் இருக்க வேண்டும். அதற்கு கீழே உள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்:

  • புதிய முகவரியின் வாக்காளர் அடையாள அட்டை (Voter ID)
  • தற்போதைய புதிய முகவரியுடன் கூடிய ஆதார் கார்டு (Aadhaar Card Redacted)
  • புதிய வீட்டின் மின்சாரக் கட்டண ரசீது (Electricity Bill)
  • புதிய முகவரிக்கான எரிவாயு நுகர்வோர் அட்டை (Gas Consumer Card)
  • புதிய முகவரியில் உள்ள டெலிபோன் பில் (Telephone Bill)
  • வாடகை வீடு எனில், முறைப்படி பதிவு செய்யப்பட்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் (Rental Agreement)

உங்களுடைய பேங்க் பாஸ்புக் (Bank Passbook) முதல் பக்கம்.

இதுவும் படியுங்கள்: 75 இன்ச் Xiaomi TV.. விலை இவ்வளவுதானா?

Tamil Nadu government official TNPDS smart ration card address change online application process step by step guide with required documents explained in Tamil

How to Change Ration Card Address Online

தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் (www.tnpds.gov.in) செல்ல வேண்டும். முகப்பு பக்கத்தின் வலதுபுறத்தில் உள்ள "மின்னணு அட்டை சேவைகள்" என்ற பிரிவின் கீழ் இருக்கும் "முகவரி மாற செய்ய" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது திறக்கும் புதிய பக்கத்தில், உங்களது ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். அதன் கீழே தோன்றும் கேப்ட்சா குறியீட்டையும் சரியாக டைப் செய்து, 'பதிவு செய்' பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களது மொபைல் எண்ணிற்கு வரும் ரகசிய இலக்க ஓடிபி எண்களைச் சரியாக உள்ளிட்டு 'சமர்ப்பி' கொடுக்க வேண்டும்.

இதுவும் படியுங்கள்: BSNL 4G Puducherry: புதுச்சேரி BSNL பயனர்களுக்கு 2 குட் நியூஸ்!

Tamil Nadu government official TNPDS smart ration card address change online application process step by step guide with required documents explained in Tamil

Family Card Address Change Apply Online

உங்களது ரேஷன் கார்டு கணக்கு லாகின் ஆனதும், திரையில் தோன்றும் "சேவையைப் தேர்ந்தெடுக்கவும்" என்ற டிராப்-டவுன் மெனுவில் "முகவரி மாற்றம்" என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர், உங்களது புதிய முகவரியை (கதவு எண், தெரு பெயர், மாவட்டம், கிராமம் மற்றும் பின்கோடு) தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் துல்லியமாக டைப் செய்ய வேண்டும்.

அடுத்ததாக, மேலே நாம் குறிப்பிட்ட புதிய முகவரி சான்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை (1MB அளவிற்குள் JPEG, PNG அல்லது PDF வடிவில்) அப்லோடு செய்ய வேண்டும். இறுதியாக, நீங்கள் உள்ளிட்ட விபரங்கள் அனைத்தும் சரிதானா என்பதை உறுதி செய்து விட்டு, கீழே உள்ள செக்பாக்ஸை டிக் செய்து "சமர்ப்பி" கொடுக்க வேண்டும்.

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டவுடன் திரையில் ஒரு குறிப்பு எண் தோன்றும், அதைச் பாதுகாப்பாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களது பகுதிக்குரிய வட்ட வழங்கல் அதிகாரி இந்த ஆவணங்களை ஆன்லைனிலேயே சரிபார்த்து ஒப்புதல் அளித்த பின், உங்களது ஸ்மார்ட் கார்டில் புதிய முகவரி பக்காவாக அப்டேட் ஆகிவிடும்.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக