யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India ) ஆனது, நாடு முழுவதும் ஆதார் அட்டை (Aadhaar Card) வைத்து இருக்கும் அனைவருக்கும் "கிட்டத்தட்ட" ஒரு லாஸ்ட் வார்னிங்கை விடுத்துள்ளது. தற்போதுள்ள பழைய எம்ஆதார் (mAadhaar) ஆப் ஆனது விரைவில் நிறுத்தப்பட்டு வேலை செய்யாமல் போகும் என்று யுஐடிஏஐ அறிவித்துள்ளது. பழைய ஆப்பிற்கு பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட டேட்டா பகிர்வு (Selective Data Sharing) மற்றும் வலுவான அங்கீகார முறைகளில் அதிக கவனம் செலுத்தும் வகையில் மறுவடிவமைக்கப்பட்ட புதிய ஆதார் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து யுஐடிஏஐ ஆனது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் ஆப்பிற்கு (New Aadhaar App) உடனே மாறுமாறு குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. புதிய ஆதார் ஆப் ஆனது இப்போது ஐபோன் பயனர்களுக்கான ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் (Apple App Store), ஆண்ட்ராய்டு டிவைஸ்களுக்கான கூகுள் பிளே ஸ்டோரிலும் (Google Play Store) கிடைக்கிறது. ஆதார் அட்டை தொடர்பான வேலைகளை, நிர்வகிப்பை மிகவும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஆப், பயனர்கள் தங்கள் ஆதார் விவரங்களைச் சேமிக்கவும், புதுப்பிக்கவும், தேவைப்படும்போது தகவல்களைப் பகிரவும் அனுமதிக்கிறது.
Free Aadhaar Document Update Extension
இலவச ஆதார் ஆவண புதுப்பிப்பு சேவை நீட்டிப்பு: யுஐடிஏஐ அணை இலவச ஆன்லைன் ஆதார் ஆவண புதுப்பிப்புச் சேவையை (Free Online Aadhaar Update) மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்த வேகத்தில் இந்த மாற்றம் லாஸ்ட் வார்னிங் வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நீடிக்கப்பட்ட காலக்கெடுவின் விளைவாக, குடிமக்கள் தங்கள் அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களை மைஆதார் (myAadhaar) இணையதளத்தில் எந்தக் கட்டணமும் இன்றி புதுப்பிக்கவும் சரிபார்க்கவும் முடியும். யுஐடிஏஐ--யின் அதிகாரப்பூர்வ குறிப்பாணையின்படி, முன்பு அறிவிக்கப்பட்டபடி ஜூன் 15, 2026 அன்று முடிவடைய இருந்த இந்த இலவச சேவை, இப்போது ஜூன் 14, 2027 வரை தொடர்ந்து கிடைக்கும்.
ஏதேனும் ஒரு சரிபார்ப்பின் போது, பயனரின் முழுமையான அடையாள விவரங்களை அடிக்கடி வெளிப்படுத்திய பழைய முறையுடன் ஒப்பிடுகையில், புதிய ஆதார் ஆப் ஆனது தனியுரிமையில் அதிக கவனம் செலுத்தும் அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது. புதிய மேம்படுத்தப்பட்ட ஆப் (Enhanced Mobile Application) ஆனது, பகிரப்படும் தகவல்களைக் கட்டுப்படுத்தி, பயனர் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. க்யூஆர் குறியீடு அடிப்படையிலான ஆதார் பகிர்வு, முக அங்கீகாரம், பயோமெட்ரிக் லாக் மற்றும் அன்லாக் கட்டுப்பாடுகள், மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விவரங்களை மட்டும் பகிரும் விருப்பம் ஆகியவைகளை இந்த புதிய ஆதார் ஆப்பில் உள்ள மிகவும் முக்கியமான அம்சங்கள் என்று கூறலாம்.
இதுவும் படியுங்கள்: போச்சா.. பழைய mAadhaar கதை முடிந்தது.. வந்தது புதிய Aadhaar ஆப்.. உடனே இதை மட்டும் பண்ணுங்க.. இல்லனா என்ன?
New Enhanced Authentication Layers
புதிய ஆதார் அங்கீகார செயல்முறை அடுக்குகள்: மேலும் ஆதார் அங்கீகார செயல்முறை (Aadhaar Authentication Process) ஆனது புதிய சரிபார்ப்பு விருப்பங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது வழக்கமான எஸ்எம்எஸ் (SMS) அடிப்படையிலான ஒடிபி (OTP) முறையைச் சார்ந்திருப்பதை குறைக்கிறது. ஒரே ஒரு செயல்முறையை சார்ந்திருப்பதற்கு பதிலாக, பயனர்கள் இப்போது மென்மையான மற்றும் பாதுகாப்பான அனுபவத்திற்காக பல அங்கீகார அடுக்குகளிலிருந்து (Multiple Authentication Layers) தேர்வு செய்யலாம். அவைகள்:
- முக அங்கீகாரம் (Face authentication)
- க்யூஆர் குறியீடு அடிப்படையிலான சரிபார்ப்பு (QR code-based verification)
- ஒடிபி சரிபார்ப்பு (OTP verification) - இன்னும் உள்ளது, ஆனால் இனி முதன்மையான மற்றும் ஒரே ஒரு தேர்வாக இருக்காது
க்யூஆர் அடிப்படையிலான அம்சமானது, காகித வேலைகளையும், கைமுறை சரிபார்ப்பு படிகளையும் குறைப்பதன் மூலம், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பிற சேவை மையங்களில் (Service Centers) அடையாள சரிபார்ப்புகளை விரைவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stronger Biometric and Privacy Controls
பயோமெட்ரிக் மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகள்: கடைசிப் பகுதியாக, புதிய ஆதார் ஆப் ஆனது பயனர்களுக்கு அவர்களின் அடையாளம் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களின் (Biometric Data Control) மீது அதிகக் கட்டுப்பாட்டையும் அளிக்கிறது. கீழ்வரும் கட்டுப்பாடுகள் பழைய ஆப்பில் இல்லாத தனியுரிமை அம்சங்கள் ஆகும்.
- கைரேகை, முகம் மற்றும் கருவிழி அங்கீகார தரவுகளை லாக் செய்வதற்கான விருப்பம்
- பயோமெட்ரிக் சரிபார்ப்பை எப்போது பயன்படுத்தலாம் என்பதில் கட்டுப்பாடு. குறிப்பாகப் பகிரப்பட்ட அல்லது பொது டிவைஸ்களில், ஆதார் விவரங்களின் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டிற்கு எதிரான கூடுதல் பாதுகாப்பு.
