போச்சா.. பழைய mAadhaar கதை முடிந்தது.. வந்தது புதிய Aadhaar ஆப்.. உடனே இதை மட்டும் பண்ணுங்க.. இல்லனா என்ன?

New Aadhaar App Download Link Tamil: பழைய mAadhaar ஆப் நிறுத்தப்பட்டு UIDAI அறிமுகம் செய்துள்ள புதிய ஆதார் ஆப் டவுன்லோடு மற்றும் அதன் அம்சங்கள் இதோ.

போச்சா.. பழைய mAadhaar கதை முடிந்தது.. வந்தது புதிய Aadhaar ஆப்.. உடனே இதை மட்டும் பண்ணுங்க.. இல்லனா என்ன?, UIDAI official new Aadhaar mobile application launch to replace old mAadhaar app with face authentication and mobile address update benefits explained in Tamil

Aadhaar App: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது புதிய ஆதார் (Aadhaar) ஆப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரை பயன்பாட்டில் இருந்து வந்த எம்ஆதார் (mAadhaar) ஆப்புக்கு மாற்றாக இந்த புதிய ஆப் கொண்டு வரப்பட்டுள்ளது. பழைய செயலியை முழுமையாக நிறுத்த யுஐடிஏஐ திட்டமிட்டுள்ளதால், ஆதார் வைத்திருக்கும் அனைவரும் இந்த புதிய ஆப்புக்கு மாற வேண்டியுள்ளது.

Steps to Download and Register New Aadhaar App

புதிய ஆதார் ஆப்பை டவுன்லோட் செய்து, பதிவு செய்வது எப்படி? இந்த புதிய டிஜிட்டல் செயலியின் சிறப்பம்சங்களின் பின்னணியில் உள்ள இன்ஸ்டாலேஷன் விபரங்கள் நுகர்வோர் தேடும் மிக முக்கியமான விஷயமாக மாறியுள்ளது. புதிய கொள்கையின்படி, வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைலில் புதிய ஆப்பை செட் செய்ய வேண்டிய எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • ஸ்டெப் 1: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ஆதார் ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும். (pehchaan.uidai.gov.in/app/download) இந்த லிங்கை பயன்படுத்தியும் டவுன்லோட் செய்யலாம்.
  • ஸ்டெப் 2: டவுன்லோட் செய்த பிறகு இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இப்போது, ரிஜிஸ்டர் (Register) செய்ய வேண்டும். ஆகவே, ஆதார் நம்பரை கொடுக்க வேண்டும் [Aadhaar Redacted].
  • ஸ்டெப் 3: 12 இலக்க ஆதார் நம்பரை கொடுத்து தொடரவும் (Continue) விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளவும்.
  • ஸ்டெப் 4: இப்போது, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்பட்டு வெரிபிகேஷன் செய்யப்படும்.
  • ஸ்டெப் 5: இதை செய்த பிறகு பேஸ் ஆதன்டிகேஷன் (Face Authentication) செய்யப்படும். ஆகவே, செல்பீ கேமராவை சரியாக வைத்து வெரிபிகேஷன் செய்து கொள்ளவும்.
  • ஸ்டெப் 6: 6 இலக்க பின் நம்பரை செட் செய்து வைத்து கொள்ளலாம்.

இதை செய்த பிறகு 6 இலக்க பின் நம்பரை கொடுத்து லாகின் செய்து கொள்ளலாம். இந்த ஆப் வழியாக மொபைல் நம்பர், முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம். ஃபேமிலி ஆதார் நம்பர்களையும் இணைத்து கொள்ளலாம். பயோமெட்ரிக் லாக்கிங் மற்றும் அன்லாக்கிங் விருப்பம் கிடைக்கும். ஆதார் நம்பரை டிஜிட்டலாக ஷேர் செய்ய கியூஆர் கோடை பயன்படுத்தலாம்.

இதுவும் படியுங்கள்: Jio Recharge Option: மாதாந்திர ரீசார்ஜ் செலவை குறைக்கணுமா? வெறும் ₹350 பட்ஜெட்டில் ஜியோ வழங்கும் 6 மாஸ் ப்ரீபெய்ட் திட்டங்கள்!

UIDAI official new Aadhaar mobile application launch to replace old mAadhaar app with face authentication and mobile address update benefits explained in Tamil

New Features and Biometric Lock Benefits

புது ஆதார் ஆப் அம்சங்கள்: பழைய ஆப்பை விட இதில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பேஸ் ஆதன்டிகேஷன் மற்றும் பயோமெட்ரிக் லாக் (Biometric Lock/Unlock) போன்ற வசதிகள் மூலம் மற்றவர்கள் உங்கள் டேட்டாவை பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது. ஒரே ஆப்பில் மல்டி-ப்ரொபைல் (Multi-Profile) ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஆதார் ஆப் வழியாக ஒரு யூசர் அதிகபட்சமாக 5 ப்ரொபைல்களை (Profiles) சேர்த்து கொள்ள முடியும். இதன் மூலம் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களையும் ஒரே மொபைலில் நிர்வகிக்க முடியும். மொபைல் எண் மற்றும் முகவரி மாற்றம் இதில் செய்து கொள்ளலாம். முன்பெல்லாம் மொபைல் எண்ணை மாற்ற ஆதார் மையங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது.

ஆனால் இப்போது புதிய ஆப் (Aadhaar App) மூலமாகவே உங்கள் மொபைல் எண் மற்றும் முகவரியை எளிதாக அப்டேட் செய்து கொள்ள (Update) முடியும். ஆஃப்லைன் அணுகல் (Offline Access) செய்து கொள்ளலாம். இன்டர்நெட் (Internet) இல்லாத சமயங்களில் கூட, இந்த ஆப்பில் இருக்கும் க்யூஆர் கோடு (QR Code) வழியாக ஆஃப்லைன் இ-கேஒய்சி (e-KYC) செய்து கொள்ள முடியும்.

இதுவும் படியுங்கள்: AC with Stabilizer vs Without Stabilizer: கொளுத்தும் கோடையில் ஏசி வாங்குபவர்கள் கவனத்திற்கு! ஸ்டெபிலைசர் தேவையா இல்லையா? எஸ்சிஓ நிபுணரின் ரகசிய வழிகாட்டி!

Aadhaar Service Center Mandatory Services

ஆதார் சேவை மைய முக்கிய அறிவிப்பு: இந்த புதிய ஆதார் ஆப் மூலம் பெயர், பாலினம், பிறந்த தேதி போன்ற விவரங்களை மாற்ற முடியாது. அதற்கு நீங்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும். அதேபோல கைரேகை, கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்யவும் ஆதார் மையங்களுக்கு செல்ல வேண்டும். ஆதார் வைத்திருப்பவர்களுக்கு இது முக்கியமாகும்.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக