சமீபகாலமாக அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக வீடுகளுக்குக் காற்று சுத்திகரிப்பான் (Air purifier) வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், சந்தையில் பல்வேறு பிராண்டுகள் மற்றும் பிரம்மாண்டமான தொழில்நுட்பப் பெயர்களுடன் கிடைக்கும் சாதனங்களில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் பலருக்குக் குழப்பம் நீடிக்கிறது. சரியான சாதனத்தை வாங்குவதற்கு இந்த Air Purifier Buying Guide உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும் என்று ஸ்மார்த்போன்களைத் தேடித் பிடித்து வாங்குவது போல, ஏர் பியூரிஃபையரையும் நமது வீட்டின் அறை அளவு மற்றும் தேவைகளுக்கு ஏற்பவே தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த ஒரு மாடலையும் தேர்வு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய 3 அடிப்படை விஷயங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.
Air Purifier Buying Guide: Room Size and CADR
அறையின் அளவு மற்றும் கேடிஆர் மதிப்பீடு (Room size and CADR rating): ஒவ்வொரு ஏர் பியூரிஃபையருக்கும் குறிப்பிட்ட அளவிலான காற்றைச் சுத்திகரிக்கும் திறன் இருக்கும். சிறிய படுக்கையறைக்காக (Bedroom) உருவாக்கப்பட்ட சாதனத்தைப் பெரிய வரவேற்பறையில் (Living room) வைத்தால் அது நிச்சயமாகச் சரியாகச் செயல்படாது.
இதைத் தவிர்க்க சாதனத்தின் கேடிஆர் மதிப்பீட்டை (CADR rating) சரிபார்க்க வேண்டும். இந்த மதிப்பீடு ஒரு மணி நேரத்தில் எவ்வளவு சுத்தமான காற்றை அந்தச் சாதனம் வெளியிடுகிறது என்பதைத் துல்லியமாகக் காட்டும். உங்கள் அறையின் சதுர அடிக்கு (Square feet) ஏற்ற கேடிஆர் திறன் கொண்ட சாதனத்தைத் தேர்ந்தெடுப்பதே சிறந்த முடிவாகும்.
இதுவும் படியுங்கள்: 😱 ஒன்பிளஸ் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி! OxygenOS காலி.. உங்க போனுக்கு ColorOS 17 கிடைக்குமா?
Air Purifier Buying Guide: Filter Types
ஃபில்டர் வகைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் (Filter types): ஏர் பியூரிஃபையரின் மிக முக்கியமான இதயப் பகுதி அதில் பயன்படுத்தப்படும் ஃபில்டர்தான். சாதாரண வீடுகளுக்கு ஹெப்பா ஃபில்டர் (HEPA filter) மிகவும் அவசியமான ஒன்றாகும். இது நுண் தூசிகள், மகரந்தம் மற்றும் புகைத் துகள்களைக் கூட எளிதில் வடிகட்டிவிடும். சமையல் வாசம் மற்றும் செல்லப் பிராணிகளின் நாற்றத்தைப் போக்க கார்பன் ஃபில்டர் (Carbon layer filter) கொண்ட சாதனங்கள் உதவுகின்றன.
அதேவேளையில், முறையான ஹெப்பா ஃபில்டர் இல்லாமல் அயனிக் (Ionic) அல்லது எலக்ட்ரோஸ்டேட்டிக் (Electrostatic) தொழில்நுட்பம் மட்டுமே கொண்ட சாதனங்களைத் தவிர்ப்பது நல்லது. இவை விளம்பரம் செய்யப்படுவதை விடக் குறைவான செயல்திறனையே வழங்குகின்றன.
இதுவும் படியுங்கள்: GPay, PhonePe பயனர்களுக்கு அதிர்ச்சி? ₹2000-க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் கட்டணமா? உண்மை இதோ!
Maintenance and Price
பராமரிப்புச் செலவு மற்றும் விலை விவரங்கள் (Maintenance cost and price): ஏர் பியூரிஃபையர் வாங்கும் போது அதன் ஆரம்ப விலையை மட்டும் பார்க்காமல், அதன் பராமரிப்புச் செலவையும் கவனிக்க வேண்டும். ஏனெனில், இதிலுள்ள ஃபில்டர்களை சில மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டியிருக்கும்.
- ஃபில்டர்களின் விலை: ரூ. 1,500 முதல் ரூ. 5,000 வரை மாறுபடும்.
- அடிப்படை மாடல்களின் ஆரம்ப விலை: ரூ. 5,000 முதல் தொடங்குகிறது.
- அதிநவீன மாடல்களின் விலை: ரூ. 20,000 அல்லது அதற்கு மேலும் இருக்கும்.
எனவே, சாதனத்தின் விலை மற்றும் ஃபில்டர் மாற்றும் செலவு ஆகிய இரண்டையும் கணக்கிட்டு உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற ஏர் பியூரிஃபையரைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனமாகும்.