TRAI Report June 2026: இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) ஜூன் 2026 மாதத்திற்கான சிம் கார்டு மற்றும் பிராட்பேண்ட் பயனர்கள் (Broadband Users) அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியாவின் மொத்த டெலிகாம் பயனர்களின் எண்ணிக்கை 134.8 கோடியாக (1,348.08 Million) உயர்ந்துள்ளது. கடந்த மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் 0.37 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
குறிப்பாக 5ஜி வைஃபை (5G FWA) மற்றும் மெஷின் கணெக்ஷன் (M2M) பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
Wireless Subscribers Cross 1.3 Billion
மொபைல் பயனர்கள் 130 கோடி தாண்டிய சாதனை: ஜூன் 2026 முடிவில் இந்தியாவில் சிம் கார்டு மற்றும் எஃப்வாஏ (FWA) இணைப்பு வைத்துள்ள மொத்த மொபைல் பயனர்கள் எண்ணிக்கை 130 கோடியைக் கடந்துள்ளது. இதில் நகரங்களில் 74.9 கோடி பேரும், கிராமப்புறங்களில் 55 கோடி பேரும் மொபைல் சேவையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதுவும் படியுங்கள்: மார்க்கெட்டை அதிரவைக்கும் Google Pixel 11 Pro
Major Telecom Data June 2026
டெலிகாம் துறையின் முக்கிய புள்ளிவிவரங்கள்: டிராய் (TRAI) அறிக்கையின்படி, ஜூன் மாத இறுதியில் இந்தியாவில் லேண்ட்லைன் மற்றும் மொபைல் பயன்படுத்தும் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 134.8 கோடியைத் தொட்டுள்ளது. அதேபோல அதிவேக இன்டர்நெட் பயன்படுத்தும் மொத்த பிராட்பேண்ட் பயனர்கள் (Broadband Users) எண்ணிக்கை 108 கோடியைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
Wireless Mobile Market Share
மொபைல் மார்க்கெட்டில் கெத்து காட்டும் ஜியோ: நாட்டின் மொபைல் நெட்வொர்க் சந்தையில் 39.27 சதவீத பங்குகளுடன் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் பாரதி ஏர்டெல் (Bharti Airtel) 37.96 சதவீத பங்குகளுடன் கடும் போட்டி கொடுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா (Vodafone Idea - Vi) 15.50 சதவீத பங்குகளுடனும், பிஎஸ்என்எல் (BSNL) 7.25 சதவீத பங்குகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதுவும் படியுங்கள்: iPhone 18 Pro Max Leaks: ஆப்பிளின் புதிய லான்ச் பிளான்!
Top Customer Additions by Telecom Operators
ஏர்டெல் அடித்த ஜாக்பாட்: ஜூன் மாதத்தில் மட்டும் புதிதாக 53.8 லட்சம் பேர் புதிய சிம் கார்டுகளை வாங்கியுள்ளனர். இதில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் பாரதி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் 29.9 லட்சம் (2.99 Million) புதிய பயனர்களை இணைத்து ஜியோவை முந்தி முதலிடம் பிடித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) 21.4 லட்சம் புதிய பயனர்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. விஐ (Vi) 1.63 லட்சம் பயனர்களையும், பிஎஸ்என்எல் (BSNL) 94,000 புதிய பயனர்களையும் மட்டுமே பெற்றுள்ளன.
Drop in Wireline Subscribers
சரிவைச் சந்தித்த லேண்ட்லைன் இணைப்புகள்: மொபைல் மற்றும் 5ஜி பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பழமையான லேண்ட்லைன் (Wireline) இணைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. மே மாதத்தில் 4.86 கோடியாக இருந்த லேண்ட்லைன் பயனர்களின் எண்ணிக்கை, ஜூன் மாத முடிவில் 4.78 கோடியாகக் குறைந்துள்ளது.

