Xiaomi Pad 8: ஸ்மார்ட்போன்களின் தொடர்ச்சியான விலை உயர்வுக்கு மத்தியில், டேப்லெட் மாடல்களின் விலைகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக இந்திய சந்தையில், ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் தனது 3 டேப்லெட் மாடல்களின் விலையை ரூ.2,000 வரை உயர்த்தியுள்ளது. நுகர்வோர் தொழில்நுட்ப சந்தையில் நிலவும் பொதுவான போக்குக்கு ஏற்பவே இது அமைந்துள்ளது. மெமரி (Memory) சிப்களின் தட்டுப்பாடு காரணமாகப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
என்னென்ன மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு உள்ளன? ஆன்லைனில் தற்பொழுது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஷாவ்மீ பேட் 8 (Xiaomi Pad 8), ரெட்மி பேட் 2 ப்ரோ (Redmi Pad 2 Pro) மற்றும் ரெட்மி பேட் 2 (Redmi Pad 2) ஆகியவற்றின் விலைகள் ஒவ்வொன்றும் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை அதிகரிக்கப்பட்டு உள்ளன.
மிகவும் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான சஞ்சு சவுத்ரி வழியாகக் கிடைத்துள்ள விவரங்களின் அடிப்படையில் தான் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் காரணமாக வரவிருக்கும் பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனைகள் வழக்கத்தை விடக் குறைவான உற்சாகத்தையே அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவும் படியுங்கள்: iQOO Z11 Lite: 6500mAh பேட்டரியுடன் புது 5ஜி போன்!
Xiaomi Pad 8
ஷாவ்மீ பேட் 8 விலை விபரங்கள் (Xiaomi Pad 8 Price List): பிரீமியம் சந்தையில் இருக்கும் இந்த மாடலின் விலையானது தற்பொழுது நுகர்வோருக்குப் பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளது. இதனுடைய 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.35,999 இல் இருந்து ரூ.37,999 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இதன் டாப் வேரியண்ட் விலை ரூ.38,999 இல் இருந்து ரூ.40,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்த மாடல் இப்போது பிரீமியம் டேப்லெட் பிரிவுக்கு நெருக்கமாக வந்துள்ளது.
Redmi Pad 2 Pro
ரெட்மி பேட் 2 ப்ரோ விலை விபரங்கள் (Redmi Pad 2 Pro Price List): நடுத்தர விலைப் பிரிவில் இருக்கும் இந்த மாடலும் தற்பொழுது விலை ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. இதனுடைய 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வைஃபை மாடல் விலை ரூ.26,999 இல் இருந்து ரூ.27,999 ஆக மாறியுள்ளது.
மேலும் இதன் 5ஜி வேரியண்ட்டின் 128ஜிபி மெமரி மாடல் விலை ரூ.29,999 இல் இருந்து ரூ.30,999 ஆகவும், இதனுடைய 256ஜிபி மெமரி கொண்ட 5ஜி மாடல் விலை ரூ.31,999 இல் இருந்து ரூ.32,999 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் காரணமாக இந்த ப்ரோ மாடல் மிட்ரேன்ஞ் விலைப் பிரிவில் சற்று மேல்நிலைக்கு நகர்கிறது.
இதுவும் படியுங்கள்: இனி சிலிண்டருக்கும் வெயிட் பண்ண வேண்டாம்.! 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி.. இந்தியாவில் புதிய சேவையை அறிமுகப்படுத்திய Swiggy Instamart!
Redmi Pad 2
ரெட்மி பேட் 2 விலை விபரங்கள் (Redmi Pad 2 Price List): பட்ஜெட் சந்தையில் விற்கப்படும் இந்த மாடலின் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட எல்டிஇ (LTE) வேரியண்ட் விலை ரூ.18,999 இல் இருந்து ரூ.19,999 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இதன் 6ஜிபி ரேம் மாடல் விலை ரூ.20,999 ஆகவும், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி கொண்ட வேரியண்ட் விலை ரூ.21,999 இல் இருந்து ரூ.22,999 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பிற்குப் பிறகும் இந்த மாடல் இன்னுமும் பட்ஜெட் விலைப் பிரிவிலேயே தான் உள்ளது. ஆனால் அதன் உயர்ந்த விலை காரணமாக அதன் வேல்யூ-ஃபார்-மணி சற்று குறைந்துள்ளது. ஆக நீங்கள் ஒரு புதிய கேஜெட்டை வாங்க திட்டமிட்டிருந்தால், அதை உடனே செய்வது நல்லது.


