பாதிக்குப் பாதி விலையில் கிடைத்தால் வீட்டுக்கு வீடு ஆர்டர் விழாமல் இருக்குமா என்ன என்று கேட்கும்படியான தள்ளுபடி விலைக்கு ஏசர் 55 இன்ச் கியூஎல்இடி கூகுள் டிவி (Acer 55 inch QLED Google TV) தற்போது விற்பனைக்குக் கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட பிரீமியம் அம்சங்களில் இந்த ஸ்மார்ட் டிவி பட்டையைக் கிளப்பி இருக்கிறது.
இப்போது அமேசான் தளத்தில் சந்தை விலையில் இருந்து 51 சதவீத நேரடி தள்ளுபடி கொடுக்கப்பட்டு ஏசர் 55 இன்ச் சூப்பர் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி கியூஎல்இடி கூகுள் டிவி (Acer 55 inch Super Series 4K Ultra HD Smart QLED Google TV) கிடைக்கிறது. ஆகவே, இதனை வெறும் ரூ.37,999 விலைக்கு வாங்கலாம். மேலும், ரூ.1,138 மதிப்பில் கூடுதல் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் சலுகையும் கிடைக்கிறது.
Acer 55 inch Super Series QLED Google TV Specifications
ஏசர் 55 இன்ச் சூப்பர் சீரிஸ் கியூஎல்இடி கூகுள் டிவி அம்சங்கள்: நவீன ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த டிவி மிகச் சிறப்பாக இயங்குகிறது. ஆகவே இதில் கூகுள்காஸ்ட் (Googlecast), ஃபாஸ்ட்காஸ்ட் (Fastcast) மற்றும் மீட்டிங் மோட் (Meeting Mode) வசதிகள் கிடைக்கின்றன. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) ஆதரவு உள்ளதால் விரும்பிய அனைத்து ஆப்களையும் எளிதாக டவுன்லோட் செய்யலாம்.
ஆகவே நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஒட்டுமொத்த ஓடிடி ஆப்களும் இந்த ஏசர் டிவியில் தடையின்றிக் கிடைக்கின்றன. இதனுடன் வாய்ஸ் கமாண்ட் கொடுக்க கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) மற்றும் வேகமான செயல்பாட்டிற்கு குவாட் கோர் பிராசஸர் (Quad Core Processor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. வயர்லெஸ் இணைப்பிற்கு டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) மற்றும் புளூடூத் 5.2 (Bluetooth 5.2) வசதிகள் உள்ளன.
இதில் ஆப்களை மென்மையாக இயக்க 2.0 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. பார்வை அனுபவத்திற்கு 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளே அல்ட்ரா கியூஎல்இடி (Ultra QLED) மற்றும் 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் கொண்டு மிகத் துல்லியமான வண்ணங்களை வழங்குகிறது.
வழக்கமாக 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது. மேலும் ஏஐ பிக்சர் ஆப்டிமைசேஷன் (Ai Picture Optimisation), 4கே எச்டிஆர் கிடைக்கிறது. கேமிங் விளையாடும் போது விஆர்ஆர் மோடில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate in VRR mode) கிடைக்கிறது. எச்டிஆர்10 (HDR10) மற்றும் எச்எல்ஜி (HLG) ஆதரவுகளும் உள்ளன.
காட்சிகளின் அசைவுகளை அழகாக்கும் எம்இஎம்சி (MEMC), டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் ஏஎல்எல்எம் (ALLM) கொடுக்கப்பட்டு உள்ளது. தியேட்டர் போன்ற அனுபவத்திற்கு அதிரடியான 80W சவுண்ட் அவுட்புட் (80W sound output) கொண்ட மாடலாக இந்த ஏசர் டிவி வாங்கக் கிடைக்கிறது. இதில் ஆழ்ந்த பேஸ் ஒலியைத் தரும் ஜிகா பேஸ் (GIGA BASS) சப்போர்ட் மற்றும் சினிமா தர டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது.
மேலும் டால்பி எம்எஸ்12_இசட் (Dolby MS12_Z) சப்போர்ட் மற்றும் டூயல் ஆம்பிளிஃபயர் கொண்டுள்ளது. ஆகவே தெளிவான வூப்பர் மற்றும் ட்வீடர்கள் கிடைக்கின்றன. உயர்தர ஆடியோவிற்காக ஈஏஆர்சி (eARC) சப்போர்ட் உள்ளது. புளூடூத், வை-பை மட்டுமல்லாமல், ஏவி, ஆர்எப், ஈதர்நெட், ஹெட்போன் ஜாக், எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் யூஎஸ்பி போர்ட்களும் இதில் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.


