3D கர்வ்டு டிஸ்பிளே! Sony கேமரா! LAVA Virat Curve போன் மாஸ் என்ட்ரி!

இந்தியாவில் லாவா விராட் கர்வ் (LAVA Virat Curve) ஸ்மார்ட்போன் 3D கர்வ்டு அமோலெட் டிஸ்பிளே, சோனி கேமரா மற்றும் 6000mAh பேட்டரியுடன் அறிமுகம்

3D கர்வ்டு டிஸ்பிளே! Sony கேமரா! LAVA Virat Curve போன் மாஸ் என்ட்ரி!

ஒட்டுமொத்த சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களையும் தூக்கிச் சாப்பிடும்படியான அட்டகாசமான டிசைனில் இந்தியாவில் லாவா மொபைல்ஸ் (LAVA Mobiles) நிறுவனமானது, தனது புதிய லாவா விராட் கர்வ் (LAVA Virat Curve) ஸ்மார்ட்போனை களமிறக்க இருக்கிறது. இந்த புதிய லாவா ஸ்மார்ட்போனின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் பாலிசி உள்ளிட்ட அனைத்து முக்கிய விவரங்களும் வெளியீட்டுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக உறுதியாகி உள்ளன.

லாவா நிறுவனத்தின் விராட் சீரிஸ் மாடல்களில் முதன்முறையாக 3D கர்வ்டு டிஸ்பிளே கொண்ட மாடலாக வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், வருகிற செப்டம்பர் 21 ஆம் தேதியன்று இந்தியாவில் வெளியாக இருக்கிறது. பிரபல பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் உள்ள மைக்ரோசைட் வழியாக இதன் டிசைன், கேமரா, பேட்டரி, சிப்செட் மற்றும் ரேம் உள்ளிட்ட ஒட்டுமொத்த சிறப்பம்சங்களும் தற்போது வெளிவந்துள்ளன.

LAVA Virat Curve Specifications

லாவா விராட் கர்வ் அம்சங்கள்: வேகமான மற்றும் தடையற்ற செயல்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையில் இதில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 சிப்செட் (Octa Core MediaTek Dimensity 7100 chipset) பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. ஆகவே பட்ஜெட் விலையிலும் பயனர்கள் பக்கா செயல்திறனை எதிர்பார்க்கலாம். இதில் 6 ஜிபி ரேம் மற்றும் கூடுதலாக 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் வசதியுடன் மொத்தம் 12 ஜிபி ரேம் ஆதரவும், 128 ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பகமும் வழங்கப்பட்டுள்ளது.

மென்பொருளைப் பொறுத்தவரை கூகுளின் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம் (Android 16 OS) மூலம் இந்த சாதனம் இயங்குகிறது. இதில் 2 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் உறுதியாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போனின் பாதுகாப்பிற்கு ஐபி64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (IP64 dust and water resistance) மட்டுமின்றி, ராணுவ தரத்திலான MIL-STD 810H மிலிட்டரி கிரேடு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது; இதனால் கை நழுவி விழுந்தாலும் சேதமடையாத டிராப் மற்றும் ஷாக் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பு உறுதியாகிறது.

இதையும் படியுங்கள்: 51% அதிரடி தள்ளுபடி! 55 இன்ச் Acer QLED கூகுள் டிவி மாஸ் ஆஃபர்!

3D கர்வ்டு டிஸ்பிளே! Sony கேமரா! LAVA Virat Curve போன் மாஸ் என்ட்ரி!

LAVA Virat Curve Display

லாவா விராட் கர்வ் டிஸ்பிளே: கண்கவர் பிரம்மாண்ட பார்வை அனுபவத்தை வழங்கும் நோக்கில் 6.67 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3D கர்வ்டு அமோலெட் டிஸ்பிளே (6.67-inch FHD+ 3D Curved AMOLED display) பேனல் கொடுக்கப்பட்டுள்ளது. இது 2400 x 1080 பிக்சல்கள் ரெசொலூஷன், 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் 100 சதவீத டிசிஐ பி3 கலர் காமட் ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

மேலும் இதில் தொடுதிரை உணர்வை மிக மென்மையாக்கும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் வெயிலிலும் தெளிவாகப் பார்க்கும் வகையில் 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (1100 nits peak brightness) வசதிகள் உள்ளன. இதன் மிகப்பெரிய சிறப்பம்சமாக பின்புற கேமரா தொகுதிக்குக் கீழே மேட்ரிக்ஸ் அனிமேஷன்கள் மற்றும் நோட்டிபிகேஷன்களைக் காட்டும் யுனிக் ரியர் மினி டிஸ்பிளே (Unique Rear Mini Display) வசதி கொடுக்கப்பட்டுள்ளது; இதன் மூலம் கிட்டத்தட்ட டூயல் டிஸ்பிளே கொண்ட மாடலாகவும் இது மிளிர்கிறது.

LAVA Virat Curve Camera & Battery

லாவா விராட் கர்வ் கேமரா மற்றும் பேட்டரி: புகைப்படப் பிரியர்களுக்காக இதன் பின்புறத்தில் அதிநவீன சோனி ஐஎம்எக்ஸ்752 சென்சார் (Sony IMX752 sensor) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் தெளிவான காட்சிகளைப் படம் பிடிக்க 10X டிஜிட்டல் ஜூமிங், உயர்தர 2K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 720p ஸ்லோவ் மோஷன் வீடியோ ரெக்கார்டிங் போன்ற பல மேம்பட்ட அம்சங்கள் உள்ளன. சிறந்த ஆடியோ அனுபவத்திற்காக டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) அமைப்பும் இதில் இடம்பெற்றுள்ளது.

நீண்ட நேர பயன்பாட்டிற்கு உத்தரவாதம் தரும் வகையில் இதில் சக்திவாய்ந்த 6000mAh பேட்டரி (6000mAh battery) திறன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மின்னல் வேகத்தில் சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (45W fast charging) ஆதரவும் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஹெரிடேஜ் இண்டிகோ (Heritage Indigo) மற்றும் மக்ரனா ஐவரி (Makrana Ivory) ஆகிய இரண்டு கவர்ச்சிகரமான நிறங்களில் வெளியாகிறது. இதன் அதிகாரப்பூர்வ விலை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், பட்ஜெட் விலையிலேயே களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக