ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் (Oppo Find X10 Pro Max) ஸ்மார்ட்போன் இந்த மாதம் இறுதியில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் வெளியானதும், அதனைத் தொடர்ந்து மற்ற நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் இணையத்தில் கசிந்துள்ளன. டெக் பிரியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த புதிய ஒப்போ போனின் முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
Oppo Find X10 Pro Max Specifications
ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்: புதிய ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் 6.89-இன்ச் 2K LTPO OLED டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்படும். இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 2கே ரெசல்யூஷன் (2K Resolution) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகள் உள்ளன. பெரிய திரை வசதியுடன் இந்த போன் வெளிவருவதால் கேமிங் மற்றும் வீடியோக்கள் பார்ப்பதற்கு காட்சி அனுபவம் மிகவும் அருமையாக இருக்கும்.
இதையும் படியுங்கள்: BSNL SIM? வச்சிருக்கீங்களா? 150 நாட்கள் ரீசார்ஜ் கவலையே இல்ல.. தினமும் 3GB டேட்டா!
Oppo Find X10 Pro Max Processor
மீடியாடெக் பிராசஸர்: மீடியாடெக் டைமன்சிட்டி 9600 ப்ரோ சிப் (Dimensity 9600 Pro chip) உடன் புதிய ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் அதிவேக செயல்திறனை வழங்கும். இதனால் இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் ஹெவி கேமிங் ஆப்களை எந்தவித தடையுமின்றி மென்மையாகப் பயன்படுத்தலாம்.
அதேபோல் கலர்ஓஎஸ் 17 சார்ந்த ஆண்ட்ராய்டு 17 இயங்குதள வசதியுடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் சந்தைக்கு வரும். இந்த போனுக்கு தொடர்ச்சியான ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் வகையில் ஒப்போ நிறுவனம் மென்பொருள் பிரிவில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.
Oppo Find X10 Pro Max Camera
கேமரா விவரக்குறிப்புகள்: குறிப்பாக 200எம்பி மெயின் கேமரா (200MP Main Camera), அல்ட்ரா வைடு கேமரா மற்றும் டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் களமிறங்குகிறது. மேலும் தெளிவான செல்பிகளுக்கும் மற்றும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 50எம்பி செல்ஃபி கேமராவும் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: ரூ.184-ல் 412 நாட்கள் BSNL.. 824GB டேட்டா + அன்லிமிடெட் வாய்ஸ்!
Oppo Find X10 Pro Max Battery
பேட்டரி பேக்கப் மற்றும் சார்ஜிங் வேகம்: 8000எம்ஏஎச் பேட்டரி (8000mAh Battery) உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த சாதனம் நாள் முழுவதும் நீடித்து நிற்கும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பெரிய பேட்டரியை மிக விரைவாக சார்ஜ் செய்ய வசதியாக அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Oppo Find X10 Pro Max Storage and Features
மெமரி மற்றும் கூடுதல் வசதிகள்: புதிய ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் சேமிப்பகத்திற்கு ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியும் உண்டு.
அத்துடன் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) பாதுகாப்புடன் புதிய ஒப்போ போன் வருகிறது. மேலும் நீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கும் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் இதில் உள்ளது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட அனைத்து நவீன கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த புதிய போனில் இடம்பெற்றுள்ளன.


