சீன மார்கெட்டிலேயே முதலில் ஓப்போ ஸ்மார்ட்போன்கள் வெளியாகும். பிறகு குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்படும். இருப்பினும், சீன வெர்ஷனில் கிடைத்த அதே பீச்சர்களை குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்க முடியாது. ஒட்டுமொத்த பீச்சர்களில் மாற்றம் இல்லாவிட்டாலும், ஓரிரு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஓப்போ ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போன் சீன மார்கெட்டில் வெளியான போது, 8000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்தது. ஆனால், குளோபல் வெர்ஷனில் 7400mAh பேட்டரி மட்டுமே கிடைக்கிறது. அதேசமயம், ஃபாஸ்ட் சார்ஜிங் வேகம் 80W ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல சீன வெர்ஷனில் 8 எம்பி செல்பீ கேமரா மட்டுமே இருந்தது, ஆனால் குளோபல் வெர்ஷனில் 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
ஓப்போ ஏ7 ப்ரோ அம்சங்கள் (OPPO A7 Pro Specifications):
இப்போது, குளோபல் மார்கெட்டில் இந்த OPPO A7 Pro மாடலுக்கு கிடைத்த பீச்சர்களை பார்க்கலாம். இதில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6360 மேக்ஸ் (Octa Core MediaTek Dimensity 6360 Max) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) மற்றும் கலர்ஓஎஸ் 16.0 (ColorOS 16.0) வழங்கப்பட்டு இருக்கிறது.
டிஸ்பிளேவைப் பொறுத்தவரையில், 6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 120Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 1000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட், 397 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்பிஎம் மோடில் 1400 நிட்ஸ் பிரைட்னஸ் பெறலாம்.
ஓப்போ ஏ7 ப்ரோ விலை மற்றும் விற்பனை (OPPO A7 Pro Price & Sale):
மேலும், 7400mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட இந்த OPPO A7 Pro போன் 8.80 எம்எம் தடிமன் மற்றும் 200 கிராம் எடையுடன் வருகிறது. பாதுகாப்பிற்காக இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கிடைக்கிறது. தற்போது ஐரோப்பிய மார்கெட்டில் உள்ள பெல்ஜியம் நாட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.
விலையைப் பொறுத்தவரையில், 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை 429 யூரோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,694 ஆக இருக்கிறது. இதே விலைக்கு மற்ற ஐரோப்பிய மார்கெட்களிலும் இந்த OPPO A7 Pro ஸ்மார்ட்போன் கிடைக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும், இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வெளியாகும்போது இதைவிடக் குறைவான விலையில் எதிர்பார்க்கலாம். ஓரிரு வாரங்களில் இந்தியாவில் OPPO A7 Pro வெளியாவது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்களை ஓப்போ இந்தியா வெளியிட வாய்ப்புள்ளது.


