ரெட்மி நிறுவனத்தின் நோட் சீரிஸ் (Note Series) மாடல்களில் புதிய வரவாக ரெட்மி நோட் 18 (Redmi Note 18) ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கிறது. சீனாவின் 3சி சான்றிதழ் தளத்தில் (3C Certification) இந்த மாடல் கசிந்து இருப்பதால், கூடிய விரைவில் மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். இதனாலேயே இந்த Redmi Note 18 ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் (Features) மற்றும் சார்ஜிங் விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
சீன மார்கெட்டிலேயே முதலில் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் வெளியாகும். பிறகு குளோபல் (Global) மற்றும் இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்படும். கடந்த ஜூலை மாதம்தான் ரெட்மி நோட் 17 சீரிஸ் (Redmi Note 17 Series) வெளியானது. இருப்பினும், இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய Redmi Note 18 சீரிஸ் மாடல்களைக் களமிறக்க ரெட்மி திட்டமிட்டுள்ளது.
ரெட்மி நோட் 18 சார்ஜிங் மற்றும் பேட்டரி (Redmi Note 18 Specifications)
அந்த வகையில் M841EE என்ற மாடல் எண்ணுடன் ரெட்மி நோட் 18 சீரிஸ் போன் 3சி தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. பிரபல டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) தகவல்படி, இந்த Redmi Note 18 மாடலில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் (67W Fast Charging) கிடைக்கிறது. முன்னதாக வெளியான ரெட்மி நோட் 17 மாடலில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (45W Fast Charging) மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்தது.
ஆனால், புதிய வெர்ஷனில் (Version) சார்ஜிங் வேகம் 67W ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல, இந்த சீரிஸில் மொத்தம் மூன்று மாடல்கள் வர இருக்கின்றன. குறிப்பாக, டாப்-எண்ட் மாடலான ரெட்மி நோட் 18 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 18 Pro Max) போனில் 10000mAh பேட்டரி (10000mAh Battery) கொடுக்கப்பட இருக்கிறது.
ஏற்கனவே ரெட்மி 17 ப்ரோ மேக்ஸ் (Redmi 17 Pro Max) மாடலிலும் 10000mAh பேட்டரி (10000mAh Battery) கிடைத்தது. ஆகவே, புதிய Redmi Note 18 ப்ரோ மேக்ஸ் மாடலில் பேட்டரி திறன் இன்னும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், கீழே விழுந்தாலும் உடையாத டிராப் ரெசிஸ்டன்ஸ் (Drop Resistance) மற்றும் உறுதியான பாடி பில்ட் (Durability) இதில் கொடுக்கப்பட இருக்கிறது.
எதிர்பார்க்கப்படும் சிப்செட், டிஸ்பிளே மற்றும் கேமரா பீச்சர்கள்
இப்போது, மிட்-ரேஞ்ச் மார்கெட்டில் (Mid-range Market) இந்த Redmi Note 18 மாடலுக்கு கிடைக்கப்போகும் மற்ற பீச்சர்களை பார்க்கலாம். அதிவேக ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் அல்லது மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் (Octa Core Snapdragon or MediaTek Dimensity Chipset) வழங்கப்பட வாய்ப்புள்ளது. அத்துடன், ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) மற்றும் ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) கொடுக்கப்பட இருக்கிறது.
மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் (Resolution) கொண்ட 6.67 இன்ச் அமோலெட் டிஸ்பிளே (AMOLED Display) எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (1000 nits Peak Brightness) கிடைக்கலாம். கேமராவைப் பொறுத்தவரையில், 50 எம்பி மெயின் கேமரா (50MP Main Camera) + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (8MP Ultra-wide Camera) மற்றும் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மார்கெட்டில் எப்போது வெளியாகும்? (Launch Details)
இருப்பினும், ரெட்மி நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ரெட்மி நோட் 17 சீரிஸ் (Redmi Note 17 Series) வெளியாகிச் சில மாதங்களே ஆகின்றன. எனவே, இந்திய மார்கெட்டில் இந்தப் புதிய Redmi Note 18 சீரிஸ் வெளியாக இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.
ஆகவே, அவசரமாகப் புதிய மிட்-ரேஞ்ச் போன் வாங்க நினைப்பவர்கள் தற்போதைய ரெட்மி நோட் 17 சீரிஸ் மாடல்களைத் தேர்வு செய்யலாம். தொடர்ந்து வரும் நாட்களில் இந்த Redmi Note 18 சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ பீச்சர்கள் (Features) மற்றும் விலை விவரங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.


