Poco M6 Pro 5G: புதிய 5ஜி போன்.. வெறும் ரூ.9,999-க்கு, 5000எம்ஏஎச் பேட்டரி… 50எம்பி கேமரா, தூள் கிளப்பும் POCO.! Poco M6 Pro 5G: புதிய 5ஜி ப...

Poco M6 Pro 5G: புதிய 5ஜி போன்.. வெறும் ரூ.9,999-க்கு,
Poco M6 Pro 5G: இப்போது இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன. ஆனால் மலிவு விலையில் 5ஜி போனை அறிமுகப்படுத்தியதன் மூலம் போகோ இன்னும் ஒரு படி மேலே சென்று விட்டது என்றே சொல்ல வேண்டும். அதாவது, நிறுவனம் சமீபத்தில் போக்கோ M6 Pro 5G போனை அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் போக்கோ M6 Pro 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது போக்கோ M6 Pro 5G போனை இன்று முதல் Flipkartல் வாங்கலாம். இந்த அசத்தலான போன் Forest Green மற்றும் Power Black வண்ணங்களில் கிடைக்கிறது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போக்கோ M6 Pro 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999. இதன் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் மாறுபாட்டின் விலை ரூ.12,999. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால், ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த போக்கோ M6 Pro 5G ஸ்மார்ட்போனை ரூ.9,999 விலையில் வாங்கலாம். மேலும் இந்த போனின் சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம்.
Poco M6 Pro 5G ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் முழு HD பிளஸ் (FHD+) LCD டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த அற்புதமான ஸ்மார்ட்போனில் 90Hz புதுப்பிப்பு விகிதம், 500 nits பிரகாசம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இந்த புதிய Poco ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த Octa கோர் ஸ்னாப்டிராகன் 4 Gen 2 4nm (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயங்குவதற்கு மிகவும் அருமையாக உள்ளது. மேலும் இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மூலம் இயங்குகிறது.
குறிப்பாக இந்த போனின் சாப்ட்வேர் வசதி மிக அருமை என்று சொல்லலாம். அதேபோல், இந்த Poco M6 Pro 5G ஸ்மார்ட்போன் 4GB/6GB ரேம் மற்றும் 64GB/128GB சேமிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது. இந்த போன் நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த Micro SD Memory Card ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது.
இந்த Poco M6 Pro 5G ஸ்மார்ட்போனில் 50 MP பிரதான கேமரா + 2 MP டெப்த் சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் நீங்கள் அற்புதமான புகைப்படங்களை எடுக்க முடியும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8எம்பி கேமராவும் உள்ளது. இது தவிர, இதில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.
மேலும், இந்த Poco M6 Pro 5G ஸ்மார்ட்போன் 18 வாட்ஸ் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியுடன் 5000 mAh பேட்டரியுடன் வருகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். இருப்பினும், இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், அகச்சிவப்பு சென்சார், டூயல் நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு போர்ட், டைப்-சி சார்ஜிங் போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் ஃபைரிங் லவுட் ஸ்பீக்கர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இது தவிர, ப்ளூடூத் 5.1, Wi-Fi 6 802.11ac, 5G SA உள்ளிட்ட இணைப்பு ஆதரவையும் தொலைபேசி கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 199 கிராம்.
COMMENTS