Redmi Note 13 Series: 120W சார்ஜிங்.. 200MP கேமரா.. Curved-Edge டிஸ்பிளே புது Redmi போன்.. என்ன மாடல்? Redmi Note 13 Series: Redmi சமீபத்தி...
Redmi Note 13 Series: 120W சார்ஜிங்.. 200MP கேமரா.. Curved-Edge டிஸ்பிளே புது Redmi போன்.. என்ன மாடல்?
Redmi Note 13 Series: Redmi சமீபத்தில் இந்தியாவில் Redmi 12 5G ஐ ரூ.10,999 விலையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் ஒரு அற்புதமான 5ஜி போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது, நிறுவனம் Redmi Note 13 Plus ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.
குறிப்பாக, Redmi Note 12 தொடரைப் போலவே இந்த Redmi Note 13 தொடர் வெளிவரும். அதாவது ரெட்மி நோட் 13, ரெட்மி நோட் 13 ப்ரோ, ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போன்கள் வெளியிடப்படும். குறிப்பாக இந்த போன்கள் பட்ஜெட் விலையில் வெளிவரும் என கூறப்படுகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்துள்ள Redmi Note 13 Pro Plus (Redmi Note 13+) அம்சங்களைப் பார்ப்போம்.
அதாவது, இந்த Redmi Note 13 Pro Plus ஸ்மார்ட்போனில் 200MP Samsung HP3 முதன்மை கேமரா + 8MP Sony IMX355 சென்சார் (Sony IMX355 sensor) அல்ட்ரா வைட் லென்ஸ் + 2MP மேக்ரோ கேமரா + 2MP டெப்த் சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. தொலைபேசியில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.
Redmi Note 13 Series: மேலும் இந்த அற்புதமான ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 16எம்பி கேமரா உள்ளது. குறிப்பாக இந்த Redmi Note 13 Pro Plus போனின் உதவியுடன் DSLR கேமராக்களை விட சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 1.5K வளைந்த எட்ஜ் டிஸ்ப்ளேவுடன் வரும். மேலும், இந்த போனின் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பிரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஒரு தனித்துவமான அனுபவத்தை தருகிறது என்று சொல்லலாம்.
வரவிருக்கும் Redmi Note 13 Pro Plus ஸ்மார்ட்போன் Mediatek Dimensity 9200+ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் சிறந்த செயல்திறனை வழங்குகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பிக்கையுடன் வாங்குங்கள். மேலும் இந்த புதிய ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் அறிமுகப்படுத்தப்படும்.
Redmi Note 13 Pro Plus ஃபோன் 8GB/16GB RAM மற்றும் 256GB/512GB சேமிப்பகத்தை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. இது நினைவக விரிவாக்கத்திற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. அதாவது இந்த அற்புதமான ஸ்மார்ட்போனில் நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
Redmi Note 13 Pro Plus ஸ்மார்ட்போனில் 5000 mAh பேட்டரி உள்ளது. மேலும், பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்து விடலாம். ஃபோன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரையும் ஆதரிக்கிறது.
குறிப்பாக, இந்த Redmi Note 13 Pro Plus ஸ்மார்ட்போன் 5G, 4G VoltE, Wi-Fi, GPS, 3.5mm ஆடியோ ஜாக், USB Type-C போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளுடன் வரும். மேலும் இந்த போன் பட்ஜெட் விலையில் இந்தியாவிற்கு வரவுள்ளதால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
COMMENTS