Samsung Galaxy S24 Ultra: மிரட்டும் Samsung.. இங்க நான் தான் கிங்கு.. 5100mAh பேட்டரி.. 200MP கேமரா, எந்த மாடல்? Samsung Galaxy S24 Ultra: ம...

Samsung Galaxy S24 Ultra: மிரட்டும் Samsung.. இங்க நான் தான் கிங்கு.. 5100mAh பேட்டரி.. 200MP கேமரா, எந்த மாடல்?
சாம்சங் தொடர்ந்து அற்புதமான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது. அதாவது தரமான கேமரா, பெரிய பேட்டரி, தனித்துவமான டிஸ்ப்ளே கொண்ட போன்களை அறிமுகம் செய்வதில் சாம்சங் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது அந்த நிறுவனம் அசத்தலான போனை தயாரித்து வருகிறது.
சாம்சங் நிறுவனம் தற்போது Samsung Galaxy S24 Ultra என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த போன் இந்தியாவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன.
Samsung Galaxy S24 Ultra கேமரா
அதாவது Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது. இது 200MP பிரதான கேமரா (ISOCELL HP2 சென்சார்) + 3X ஆப்டிகல் ஜூம் 50MP டெலிஃபோட்டோ கேமரா + 10MP பெரிஸ்கோப் லென்ஸ் + மேக்ரோ கேமரா. எனவே இந்த போனை வாங்கும் பயனர்கள் DSLR கேமராவை வாங்க வேண்டிய அவசியமில்லை.
குறிப்பாக Samsung Galaxy S24 Ultra phone உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இதில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.
டிஸ்ப்ளே
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6.8 இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1000 நிட்ஸ் பிரகாசம், 240 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி வீதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.
சிப்செட்
குறிப்பாக, இந்த Samsung Galaxy S24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 8 Gen 3 சிப்செட்டுடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் வீடியோ எடிட்டிங், கேமிங் போன்றவற்றுக்கு சிறந்தது. மேலும் இந்த கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேமிப்பு
Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட்போன் 16GB அல்லது 24GB RAM ஆதரவுடன் வரும் என்று கூறப்படுகிறது. இது 1TB சேமிப்பு, S-பென் (S-Pen) ஆதரவு உட்பட பல சிறந்த அம்சங்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டரி
மேலும், இந்த Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட்போனில் 5100 mAh பேட்டரி உள்ளது. எனவே இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். பின்னர் வேகமாக சார்ஜ் செய்யும் வசதி, இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், டால்பி ஆடியோ போன்ற அற்புதமான அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த போனில் 5ஜி, 4ஜி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. மேலும், தரமான கேமரா வசதியுடன் வெளிவரும் இந்த போன் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், Galaxy S24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் சற்று அதிக விலையில் அறிமுகப்படுத்தப்படும்.
COMMENTS