இந்திய சந்தையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய சந்தையில் நுழைந்த Honor 90, போனுக்கு சில அற்புதமான சலுகைகளை அறிவித்துள்ளது. 200MP கேமரா, 13...
இந்திய சந்தையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய சந்தையில் நுழைந்த Honor 90, போனுக்கு சில அற்புதமான சலுகைகளை அறிவித்துள்ளது. 200MP கேமரா, 13RAM, Quad Curved Display போன்றவை. Honor 90 பின்னிபெடல் எடுக்கும்.
Honor 90 விவரக்குறிப்புகள்
இந்த Honor ஃபோனில் 6.7-inch full HD+ (FHD+) OLED (Quad Curved) டிஸ்ப்ளே உள்ளது. காட்சி DCI-P3 வண்ண வரம்பு மற்றும் 1600 nits உச்ச பிரகாசத்துடன் வருகிறது.
அதனுடன் 360Hz தொடு மாதிரி வீதம், 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 3840Hz PWM மங்கலான அதிர்வெண். ஹானர் 90 போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (2.5ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 14என்எம்) சிப்செட் (2.5ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 14என்எம்) உடன் வருகிறது.
கேமிங் பிரியர்களுக்கு, கிராபிக்ஸ் கார்டில் அற்புதமான Adreno 644 GPU வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், ஹானர் மாடல்கள் MagicOS 7.1 (MagicOS 7.1) உடன் வருகின்றன. இந்த ஹானர் போன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி என 2 மாடல்களில் கிடைக்கும்.
இந்த 8ஜிபி மாடல் 5ஜிபி விர்ச்சுவல் ரேம் உடன் வருகிறது. இதேபோல், 12 ஜிபி ரேம் மாடல் 7 ஜிபி நினைவகத்துடன் வருகிறது. 200 எம்பி பிரதான கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் + 2 எம்பி (மேக்ரோ ஆப்ஷன்) டெப்த் லென்ஸுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ஃபோன் வருகிறது.
50 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் 4K வீடியோ பதிவு ஆதரவுடன் வருகின்றன. இந்த மாடல் 66W சூப்பர்சார்ஜ் உடன் 5,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது இன்று (செப்டம்பர் 14) மிட்நைட் பிளாக், டைமண்ட் சில்வர் மற்றும் எமரால்டு கிரீன் ஆகிய 3 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த HONOR 90 போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு மாடலின் விலை ரூ.37,999 மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி சேமிப்பு மாடல் ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஹானர் நிறுவனத்தின் புதிய போன் பல வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், மிகப்பெரிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒவ்வொரு மாடலுக்கும் ரூ.10,000 குறைக்கப்பட்டுள்ளது. எனவே, 8ஜிபி மாடலை ரூ.27,999க்கும், 12ஜிபி மாடலை ரூ.29,999க்கும் வாங்கலாம். மேலும் பல்வேறு அறிமுக சலுகைகளும் கிடைக்கின்றன. ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த மாடல்களை ஆர்டர் செய்தால், உடனடியாக ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும்.
மேலும் 24 மாதங்களுக்கு நோ-காஸ்ட் EMI சலுகை. மேலும், ரூ.3000 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் 30 நாட்கள் ரீ-ப்ளேஸ்மென்ட் பாலிசி போன்ற சலுகைகள் கிடைக்கின்றன. இதுதவிர ரூ.5000 மதிப்பிலான இலவச இயர்போன்கள் மற்றும் இதர சார்ஜர்கள் மற்றும் கேபிள்கள் வழங்கப்படுகிறது.
HONOR மொபைல் அறிமுகத்துக்கு பிறகு நாம் கூகுளில் சர்ச் செய்தோம் நமக்கு கிடைத்த ரிசல்ட் நாம் இமேஜாக இந்த உங்களுக்கு வைத்துள்ளோம் மற்ற நாடுகளை விட இந்தியாவில் 11 ஆயிரம் ரூபாய் குறைந்த விலையில் அறிமுகப்படுத்திய ஹானர் நிறுவனம்.
செப்டம்பர் 18 முதல் அமேசானில் இந்த போன் விற்பனைக்கு வரும். அதே தேதியில் இருந்து ஹானர் 90 மாடல் ஆஃப்லைன் ஸ்டோர்கள் மற்றும் ரிலையன்ஸ் ஸ்டோர்களிலும் கிடைக்கும். 200 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், 5,000எம்ஏஎச் பேட்டரி போன்ற பிரமாண்ட வசதிகளுடன் கூடிய போன் வெறும் ரூ.27,000 பட்ஜெட்டில் கிடைப்பது இதுவே முதல் முறை.
COMMENTS