8ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 50எம்பி ஏஐ கேமரா, பட்ஜெட்டில் 5000எம்ஏஎச் பேட்டரி போன்ற அற்புதமான வடிவமைப்பு மற்றும் அற்புதமான அம்சங்களுட...
8ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 50எம்பி ஏஐ கேமரா, பட்ஜெட்டில் 5000எம்ஏஎச் பேட்டரி போன்ற அற்புதமான வடிவமைப்பு மற்றும் அற்புதமான அம்சங்களுடன் Oppo A38 போன் விற்பனைக்கு வருகிறது.
Oppo A38 விவரக்குறிப்புகள்:
இந்த Oppo மாடல் ஆண்ட்ராய்டு 13 OS உடன் MediaTek Helio G80 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது ColorOS 13.1 மற்றும் Mali G52 MC2 GPU கிராபிக்ஸ் கார்டுடன் வருகிறது.
இந்த போன் 6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) HD+ IPS LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. டிஸ்ப்ளே 90Hz புதுப்பிப்பு வீதம், 720 nits உச்ச பிரகாசம், DCI-P3 வண்ண வரம்பு மற்றும் 180Hz தொடு மாதிரி வீதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த Oppo மாடல் 4GB RAM + 4GB Virtual RAM உடன் வருகிறது. எனவே, இது 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி என 2 வகைகளில் வருகிறது. இது 1TB வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டையும் ஆதரிக்கிறது.
புதிய Oppo A38 போன்..எந்த மாடல்?
இந்த Oppo A38 போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு (Dual Rear Camera System) உள்ளது. அந்த வகையில், 50 எம்பி ஏஐ மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா போர்ட்ரெய்ட் பொக்கே மற்றும் AI போர்ட்ரெய்ட் ரீடூச்சிங்கை ஆதரிக்கிறது.
5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் IPX5 டஸ்ட் ரெசிஸ்டண்ட் உடன் வருகிறது. இந்த Oppo போன் 5000mAh பேட்டரியுடன் 33W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. பேட்டரியில் டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது.
மேலும், இந்த போன் பக்கவாட்டு கைரேகை ஸ்கேனர், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் ஆகியவற்றுடன் வருகிறது. புளூடூத் 5.3, வைஃபை 5, என்எப்சி மற்றும் ஜிபிஎஸ் போன்ற இணைப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த Oppo A38 போன் க்ளோவ் பேக் பேனல் வடிவமைப்புடன் கருப்பு மற்றும் தங்கம் ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் செப்டம்பரில் வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) இன்று (செப்டம்பர் 4) தொடங்கப்பட்டுள்ளது.
அதே மாதத்தில் இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இது அடுத்த வாரம் வெளியாகும் வாய்ப்பு அதிகம். இந்த போனின் 64ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,000 பட்ஜெட்டிலும், 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,000 பட்ஜெட்டிலும் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. நல்ல கேமரா, பேட்டரி பேக்கப் மற்றும் சிப்செட் கொண்ட போனை மலிவான விலையில் வாங்க விரும்புபவர்களுக்கு இந்த போன் நல்ல தேர்வாகும்.
COMMENTS