Samsung நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் சாம்சங் நிறுவனம் தனித்துவமான வட...
Samsung நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் சாம்சங் நிறுவனம் தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் மீண்டும் அசத்தலான 5ஜி போனை அறிமுகம் செய்யவுள்ளது.
Samsung Galaxy A55 – Full phone specifications
Samsung நிறுவனம் Samsung Galaxy A55 5G ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த Galaxy A55 5G ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் 3C சான்றிதழ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது இந்த போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
Samsung Galaxy A55 5G ஸ்மார்ட்போனில் SM-A5560 என்ற மாடல் எண் உள்ளது. மேலும் இந்த புதிய சாம்சங் 5G போன் சக்திவாய்ந்த Exynos 1480 சிப்செட்டுடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. சிறந்த கேமிங் அம்சங்களுடன் Samsung Galaxy A55 5G போன் வருகிறது.
மேலும், இந்த Samsung Galaxy A55 5G போனில் 50MP டிரிபிள் ரியர் கேமரா உள்ளது. பின்னர் 12ஜிபி ரேம், 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 32எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் Samsung Galaxy A55 5G போன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக, இந்த Galaxy A55 5G போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. இந்த போனின் அனைத்து வசதிகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy A54 – Full phone specifications
மேலும் நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்திய Samsung Galaxy A54 5G போனின் அம்சங்களைப் பார்ப்போம். சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி மாடல் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 சிப்செட்டுடன் வெளிவந்துள்ளது. இந்த போனில் Mali-G68 MP5 GPU (Mali-G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.
இந்த அற்புதமான Samsung Galaxy A54 5G மாடல் Android 13 இயங்குதளத்துடன் வெளிவந்துள்ளது. பின்னர் இந்த சாம்சங் போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என இரண்டு மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இது 1TB வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டையும் ஆதரிக்கிறது.
Galaxy A54 5G ஃபோன் 6.4 இன்ச் முழு HD பிளஸ் (FHD+) Super AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. பின்னர் இந்த சாம்சங் 5ஜி போனில் 1080 × 2340 பிக்சல்கள், இன்ஃபினிட்டி-ஓ எச்டிஆர் சப்போர்ட், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே வசதிகள் உள்ளன.
Samsung Galaxy A54 5G ஃபோனில் 50 MP OIS பிரதான கேமரா + 12 MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 5 MP டெப்த் சென்சார் ஆகியவற்றின் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32எம்பி கேமராவும் உள்ளது.
இந்த அற்புதமான Samsung Galaxy A54 5G ஃபோன் P67 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆதரிக்கிறது. இது 5000mAh பேட்டரி மற்றும் 25W வேகமாக சார்ஜிங் கொண்டுள்ளது.
டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் சப்போர்ட், ப்ளூடூத் 5.3, வை-பை 802, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி இந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி மாடல் (என்எப்சி) உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
COMMENTS