லெவலில் ரெடியாகும் புது Samsung Galaxy A55 ஸ்மார்ட்போன்.,Samsung Galaxy A55 ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அல்லது பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்படும்.
லெவலில் ரெடியாகும் புது Samsung Galaxy A55 ஸ்மார்ட்போன்.
அதாவது Samsung Galaxy A55 ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அல்லது பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்படும். மேலும் இந்த Samsung Galaxy A55 ஸ்மார்ட்போனின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஃபோனில் டிரிபிள் ரியர் கேமரா, பஞ்ச்-ஹோல் டிசைனுடன் கூடிய டிஸ்ப்ளே மற்றும் பல அற்புதமான அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
Samsung Galaxy A55 விவரக்குறிப்புகள்:
Galaxy A55 ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த Exynos 1480 சிப்செட்டுடன் அறிமுகமாகும். எனவே வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம். இந்த ஃபோனுக்காக குறிப்பாக வழங்கப்பட்ட சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது.
மேலும் இந்த புதிய சாம்சங் போனில் Xclipse 530 GPU கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த Samsung Galaxy A55 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும். இருப்பினும், தொலைபேசி ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அற்புதமான ஐஸ்ப்ளூ, அற்புதமான இளஞ்சிவப்பு மற்றும் அற்புதமான நேவி வண்ணங்களிலும் தொலைபேசி வரும்.
Samsung Galaxy A55 ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா + 12MP அல்ட்ரா-வைட் லென்ஸ் + 5MP டெப்த் லென்ஸ் ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்புகளுடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த Samsung Galaxy A55 ஸ்மார்ட்போன் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32MP கேமராவுடன் அறிமுகமாகும். இது தவிர, தொலைபேசியில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. இந்த போனின் வடிவமைப்பில் சாம்சங் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.
Samsung Galaxy A55 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரியுடன் வெளியிடப்படும். கூடுதலாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் நினைவக விரிவாக்கத்திற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை இந்த ஃபோன் ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Samsung Galaxy A55 ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியுடன் வெளியிடப்படும். அப்போது இந்த போன் 25 வாட்ஸ் வேகமாக சார்ஜ் செய்யும் வசதி கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், 5G, 4G VoltE, Wi-Fi, GPS, USB Type-C உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த போன் வரும். மேலும் இந்த போன் ரூ.20,000 பட்ஜெட்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
photo courtesy: androidheadlines, gizmochina
COMMENTS