விரைவில் இந்தியா வரும் லெவல் Vivo V30 Pro,Vivo V30 ஸ்மார்ட்போன்.!,விரைவில் இந்தியா வரும் லெவல் Vivo V30 Pro,Vivo V30 12GB ரேம்.. Sony கேமரா.. AMOLED
இந்த நிலையில், விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. இது பற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம்.
Vivo V30 Pro விவரக்குறிப்புகள்:
Vivo V30 Pro ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த டைமன்சிட்டி 8200 சிப் உடன் வெளியிடப்படும். எனவே வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது.
Vivo V30 Pro ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி என மூன்று வகைகளில் கிடைக்கும். கூடுதலாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் நினைவக விரிவாக்கத்திற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது.
Vivo V30 Pro ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் முழு HD AMOLED (FHD+ AMOLED) டிஸ்ப்ளேவுடன் அறிமுகமாகும். குறிப்பாக, இதன் டிஸ்ப்ளே 1,260x2,800 பிக்சல்கள், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம், HDR 10 பிளஸ், 2800 nits பீக் பிரைட்னஸ் மற்றும் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த விவோ போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் உள்ளது. மேலும், இந்த Vivo V30 Pro ஸ்மார்ட்போன் பஞ்ச்-ஹோல் கட்அவுட் வடிவமைப்பு, வளைந்த டிஸ்ப்ளே, ஆரா லைட் என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் வடிவமைப்பில் விவோ சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.
Vivo V30 Pro ஸ்மார்ட்போனில் 50MP Sony IMX920 முதன்மை கேமரா + 50MP சாம்சங் JN1 சென்சார் அல்ட்ரா வைட் கேமரா + 12MP சோனி IMX663 டெலிஃபோட்டோ லென்ஸ் உடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.
Vivo V30 Pro ஸ்மார்ட்போனில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 50எம்பி கேமரா உள்ளது. இது தவிர, இதில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. மேலும், இந்த Vivo போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வரும்.
Vivo V30 Pro ஸ்மார்ட்போனில் 5G, Wi-Fi, GPS, USB Type-C போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. இந்த புதிய விவோ போன் இந்தியாவில் ரூ.30,000 அல்லது ரூ.35,000 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS