ரூ. 12000 விலையில் Realme 12x 5G புது ஸ்மார்ட்போன் அறிமுகம்..45W சார்ஜிங்.. 50MP கேமரா.. 128GB மெமரி,ரியல்மி 12எக்ஸ் 5ஜி அம்சங்கள்
ரியல்மி 12எக்ஸ் 5ஜி
Realme தனது புதிய Realme 12X 5G ஸ்மார்ட்போனை ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.குறிப்பாக, 45 வாட்ஸ் வேகமான சார்ஜிங், வசதி, 50MP கேமரா, பெரிய டிஸ்ப்ளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரவுள்ளது.
இந்நிலையில், Realme 12X 5G போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக, விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த Realme 12X 5G போன் இந்தியாவில் ரூ.12,000 விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஏற்கனவே வெளியான இந்த போனின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
Realme 12x 5G specifications
ரியல்மி 12எக்ஸ் 5ஜி அம்சங்கள்: தொலைபேசி 6.67-இன்ச் முழு HD பிளஸ் IPS LCD டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும். பின்னர் இந்த போனின் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும்.
Realme 12X 5G ஸ்மார்ட்போன் நிலையான MediaTek Dimensity 6100+ SoC மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பாக, இந்த போனின் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும், இந்த போன் Realme UI 5.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தின் (Android 14 OS) வசதியுடன் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் இந்த போன் ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும்.
Realme 12X 5G ஃபோனில் 50MP முதன்மை கேமரா + 2MP டெப்த் சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 8MP கேமராவும் உள்ளது. இது தவிர, இதில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.
இந்த Realme 12X 5G ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு மூலம் ஆதரிக்கப்படுகிறது. கூடுதலாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் நினைவக ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது.
மேலும், இந்த அற்புதமான Realme 12X 5G ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது. இந்த போனில் நீண்ட நேரம் பேட்டரியை சார்ஜ் செய்ய (45w Fast Charger) 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்யலாம்.
இந்த அற்புதமான ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் போன்ற அம்சங்கள் உள்ளன. பின்னர் இந்த போனில் IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (Dust and Water Resistant) கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த Realme ஃபோனில் டூயல் சிம், 5ஜி, வைஃபை, புளூடூத் 5.2, என்எப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. குறிப்பாக Realme 12X 5G போன் பட்ஜெட்டுக்கு ஏற்ற வரம்பில் வெளியிடப்படுவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
COMMENTS