OnePlus Nord CE 4 Lite அறிமுகம் - என்ன விலை?

OnePlus Nord CE 4 Lite அறிமுகம் - என்ன விலை?,விரைவில் அறிமுகமாகும் 80W சார்ஜிங்.. 50MP கேமரா.. இந்தியாவுக்கு வருகிறது OnePlus Nord CE 4 Lite போன்,

OnePlus Nord CE 4 Lite அறிமுகம் - என்ன விலை?

 OnePlus Nord CE 4 Lite அறிமுகம் - என்ன விலை?

OnePlus Nord CE 4 5G போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் OnePlus Nord CE 4 Lite ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வரவிருக்கும் OnePlus Nord CE 4 Lite ஸ்மார்ட்போனில் Snapdragon 7 Plus Gen 3 சிப்செட், 12GB ரேம், 80 Watts ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. OnePlus Nord CE 4 Lite ஃபோன் BIS சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது எனவே இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

OnePlus Nord CE 4 Lite specifications

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் அம்சங்கள்: இது 6.67-இன்ச் முழு HD பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இதன் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


OnePlus Nord CE 4 Lite அறிமுகம் - என்ன விலை?

Qualcomm Snapdragon 7+ Gen 3

இந்த OnePlus ஆனது ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3) உடன் அறிமுகப்படுத்தப்படும். இது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. இது Adreno 710 GPU கிராபிக்ஸ் கார்டுடன் வருகிறது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பிக்கையுடன் வாங்கலாம்.

OnePlus Nord CE 4 Lite - கேமரா

OnePlus Nord CE 4 Lite ஃபோன் 50MP முதன்மை கேமரா + அல்ட்ரா வைட் லென்ஸ் + டெப்த் சென்சார் ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வெளியிடப்படும். பின்னர் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16எம்பி கேமரா உள்ளது. இது தவிர, எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.

OnePlus Nord CE 4 Lite - ஸ்டோரேஜ்

OnePlus Nord CE 4 Lite ஃபோன் 12GB RAM மற்றும் 256GB சேமிப்பக ஆதரவுடன் கிடைக்கும். இது நினைவக விரிவாக்கத்திற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போனின் மென்பொருளில் ஒன்பிளஸ் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

OnePlus Nord CE 4 Lite அறிமுகம் - என்ன விலை?

குறிப்பாக, இந்த OnePlus Nord CE 4 Lite ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தின் அடிப்படையில் வெளியிடப்படும். இருப்பினும், இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும். மேலும் இந்த புதிய OnePlus போன் சிறந்த ஆடியோ வசதியுடன் அறிமுகமாகும்.

OnePlus Nord CE 4 Lite - பேட்டரி

மேலும், OnePlus Nord CE 4 Lite ஸ்மார்ட்போனில் 5500mAh பேட்டரி உள்ளது. எனவே இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (80W சார்ஜிங்) வசதி உள்ளது. குறிப்பாக விரைவாக சார்ஜ் செய்ய முடியும் என்பதால்.

OnePlus Nord CE 4 Lite ஃபோன் 5G ஆதரவு, USB Type-C port, Wi-Fi, GPS, NFC உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுடன் வரும். மேலும் இந்த OnePlus Nord CE 4 Lite போன் இந்தியாவில் ரூ.23,000 பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக