பட்டையை கிளப்பும் Xiaomi 15 Ultra விரைவில் அறிமுகம்.

பட்டையை கிளப்பும் Xiaomi 15 Ultra விரைவில் அறிமுகம்.,சியோமி 15 அல்ட்ரா அம்சங்கள்: Xiaomi 15 Ultra போன் OLED டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும்
பட்டையை கிளப்பும்  Xiaomi 15 Ultra விரைவில் அறிமுகம்.

Xiaomi தொடர்ந்து அற்புதமான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது. குறிப்பாக, நிறுவனம் சற்று அதிக விலையில் போனை அறிமுகப்படுத்தினாலும், விலைக்கு ஏற்ற அனைத்து சிறந்த அம்சங்களையும் இந்த போன் கொண்டுள்ளது. இந்நிலையில் சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


அதாவது மார்ச் மாதம் நடைபெறவுள்ள MWC 2025 நிகழ்வில் Xiaomi 15 Ultra ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே வெளியான சியோமி 15 அல்ட்ரா போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

Xiaomi 15 Ultra Specifications

சியோமி 15 அல்ட்ரா அம்சங்கள்: Xiaomi 15 Ultra போன் OLED டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். இந்த போனின் வடிவமைப்பில் சியோமி சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.


Xiaomi 15 அல்ட்ரா போன் சக்திவாய்ந்த (Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட்டுடன் வெளியிடப்படும். குறிப்பாக, இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் (chipset) மற்றும் செயல்திறனை வழங்குகிறது. அதேபோல் கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்களை இந்த போனில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

பட்டையை கிளப்பும்  Xiaomi 15 Ultra விரைவில் அறிமுகம்.

இந்த Xiaomi 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை சேமிப்பகத்தை ஆதரிக்கிறது. இந்த போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. மேலும் இந்த போன் டால்பி ஆடியோ வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சியோமி 15 அல்ட்ரா போன் IP69+IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் உடன் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த Xiaomi 15 அல்ட்ரா போன் HyperOS 2.0 அடிப்படையிலான Android 15 இயங்குதளத்துடன் வெளியிடப்படும். இருப்பினும், இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும்.


இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் 50MP முதன்மை கேமரா + 50MP அல்ட்ரா வைட் கேமரா லென்ஸ் + 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் + 200MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றின் குவாட் ரியர் கேமரா ஆதரவுடன் வரும். எனவே, இந்த போனில் DSLR கேமராக்கள் போன்று துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.


Xiaomi 15 Ultra போன் 5000mAh பேட்டரியுடன் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. பின்னர் இந்த போனில் USB Type-C port, 5G, 4G LTE, Wi-Fi 7, Bluetooth உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக