![]() |
| Vivo T3 Ultra ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி ரூ.3000, விலைகுறைப்பு.! |
விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த விவோ போன் 6.78-இன்ச் டிஸ்ப்ளே, 50MP செல்ஃபி கேமரா மற்றும் 5500mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறந்த அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது விவோ டி3 அல்ட்ரா போனின் சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.
அதாவது, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் ரூ. 29,999 விலையில் விற்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ. 3000 தள்ளுபடியும் உண்டு. எனவே, இந்த விவோ ஸ்மார்ட்போனை ரூ. 26,999 விலையில் வாங்கலாம்.
Vivo T3 Ultra Specifications
விவோ டி3 அல்ட்ரா அம்சங்கள்: இந்த போன் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதம், 480Hz தொடு மாதிரி வீதம், 4500 நிட்ஸ் உச்ச பிரகாசம், HDR10+ (HDR10+) உள்ளிட்ட பல அம்சங்களையும் கொண்டுள்ளது.
இந்த Vivo T3 Ultra போனில் Octa Core Dimensity 9200 Plus 4nm சிப்செட் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து ஆப்களையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் பயன்படுத்தலாம். அதாவது, இந்த Dimensity சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது.
Vivo T3 Ultra போன் Immortalis G715 GPU கிராபிக்ஸ் கார்டுடன் வருகிறது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பிக்கையுடன் வாங்கலாம். இந்த Vivo போன் ஆண்ட்ராய்டு 14 OS அடிப்படையில் வெளியிடப்பட்டது. இருப்பினும், இந்த போன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும்.
Vivo T3 Ultra கேமரா
இந்த போனில் 50 MP பிரதான Sony IMX921 சென்சார் + 8 MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவின் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 50 MP கேமராவும் இதில் உள்ளது. இதேபோல், இந்த போன் OIS தொழில்நுட்பம், ZEISS ஆப்டிக்ஸ் ஆதரவு மற்றும் 4K வீடியோ பதிவு உள்ளிட்ட பல சிறந்த கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது.
Vivo T3 Ultra ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரியுடன் வெளியிடப்பட்டது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வேகமான சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. இந்த அற்புதமான விவோ ஸ்மார்ட்போன் IP68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மதிப்பீட்டையும் கொண்டுள்ளது.
இது தவிர, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டைப்-சி ஆடியோ உள்ளிட்ட பல சிறந்த அம்சங்களுடன் இந்த போன் வெளியிடப்பட்டது. குறிப்பாக, நீங்கள் விவோ T3 அல்ட்ரா ஸ்மார்ட்போனை லூனார் கிரே மற்றும் ஃப்ரோஸ்ட் கிரீன் வண்ணங்களில் வாங்கலாம்.
