iQOO 15: போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது iQOO நிறுவனம்.

iQOO 15: போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது iQOO நிறுவனம்.,iQOO 15 images leaked online: check all details here, iQOO 15 specifications

iQOO 15: போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது iQOO நிறுவனம்.

iQOO 15 ஸ்மார்ட்போன் விரைவில் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், புதிய iQOO போனின் படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. வெள்ளை மற்றும் சிவப்பு நிற கொண்ட மாடல் மற்றும் சாம்பல் நிறத்தில் ஒரு மாடல் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இதேபோல், ஐக்யூ  15 போன் சாம்சங் OLED பேனலுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் ஒரு அற்புதமான வடிவமைப்புடன் அறிமுகப்படுத்தப்படுவதால், இது அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்துள்ள இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

 iQOO 15 specifications

ஐக்யூ 15 அம்சங்கள்: iQOO 15 ஸ்மார்ட்போன் நிலையான (Snapdragon 8 Elite 2) குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்கும்.

iQOO 15: போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது iQOO நிறுவனம்.

குறிப்பாக, இந்த ஐக்யூ 15 மாடல் 6.8 அங்குல அம்சத்துடன் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே (2K resolution) 2கே ரெசல்யூஷன், (120 Hz refresh rate) 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.

ஐக்யூ 15 போன் 16 GB வரை RAM மற்றும் 512 GB வரை மெமரி ஆதரவுடன் வெளியிடப்படும். புதிய iQOO 15 ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே (in-display ultrasonic fingerprint sensor) அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மூலம் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. மற்ற போன்களுடன் ஒப்பிடும்போது இந்த புதிய ஐக்யூ 15 போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதேபோல்,ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் 50 MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளியிடப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் நீங்கள் அசத்தலான படங்களை எடுக்கலாம். இந்த புதிய போன் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32 MP கேமராவுடன் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர, இந்த போனில் LED ஃபிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.
iQOO 15: போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது iQOO நிறுவனம்.

iQOO 15 ஸ்மார்ட்போன் (Dust & Water Resistant) IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்  வெளியிடப்படும். இந்த போன் இரட்டை ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இந்த போனில் கேமிங் சிப் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

iQOO 15 ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்படும். எனவே நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், சார்ஜ் செய்வது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி காப்புப்பிரதியைப் பெறும். மேலும், இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W வேகமான சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்யலாம்.

ஐக்யூ 15 போனில் 5G, 4G VoLTE, Wi-Fi, GPS, USB Type-C உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. இந்த போன் சற்று அதிக விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.


photo credit: gizmochina

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக