Amazon Great Indian Festival Sale 2025: செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கும். இந்த சிறப்பு விற்பனையில், அற்புதமான (Lava Play Ultra 5G) லாவா ப்ளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.12,999 ரேஞ்ச்.. Sony கேமரா.. 5000mAh பேட்டரி.. 33W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
அதாவது, 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட லாவா ப்ளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 14,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில், இந்த போனை ரூ. 12,999 விலையில் வங்கி சலுகைகளுடன் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
Lava Play Ultra 5G Specifications
லாவா பிளே அல்ட்ரா 5ஜி அம்சங்கள்: லாவா ப்ளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் தரமான (MediaTek Dimensity 7300 4nm) ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4nm சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், கேமிங் பயனர்களை ஈர்க்க, இந்த போனில் மாலி-ஜி615 எம்சி2 ஜிபியூ கிராபிக்ஸ் கார்டு ஆதரவு உள்ளது.
குறிப்பாக, இந்த புதிய லாவா ப்ளே அல்ட்ரா 5G ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் முழு HD பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே ( 120 Hz refresh rate and 1000 nits peak brightness.) 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறந்த அம்சங்களையும் கொண்டுள்ளது.
இந்த போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் விற்பனை செய்யப்படும். கூடுதலாக, இந்த லாவா ஸ்மார்ட்போன் நினைவக விரிவாக்க ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது, இந்த போனில் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
லாவா ப்ளே அல்ட்ரா 5G ஸ்மார்ட்போனில் 64MP சோனி IMX682 பிரைமரி கேமரா + 5MP மேக்ரோ சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த போனில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 13MP கேமராவும் உள்ளது. இது தவிர, இந்த போனில் LED ஃபிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.
லாவா ப்ளே அல்ட்ரா 5G ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் USB டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த போன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்பைப் பெறும்.
இதேபோல், லாவா ப்ளே அல்ட்ரா 5ஜி போன் IP64 தூசி மற்றும் நீர் எதிர்ப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் இந்த லாவா போனில் 5G, டூயல் 4G VoLTE, Wi-Fi 6E 802.22 AX, ப்ளூடூத் 5.2, பீடோ, GPS, GLONASS, கலிலியோ, USB டைப்-சி உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் உள்ளன.
லாவா ப்ளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனும் 5000mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W வேகமான சார்ஜிங் வசதி உள்ளது. இந்த போனை ஆர்க்டிக் ஃப்ரோஸ்ட் மற்றும் ஆர்க்டிக் ஸ்லேட் வண்ணங்களில் வாங்கலாம்.
