Lava Storm Play 5G Amazon Price
லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி அமேசான் விலை: இந்த லாவா ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் (6ஜிபி மெய்நிகர்) + 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ. 10,499, மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ. 12,499. இப்போது, முன்கூட்டிய ஆர்டர்களுக்கு அமேசானில் ரூ. 999.90 வங்கி தள்ளுபடி கிடைக்கிறது.
இந்த தள்ளுபடியை நீங்கள் SBI கிரெடிட் கார்டு மூலம் பெறலாம். ரூ. 500 கூப்பன் தள்ளுபடியும் உள்ளது. எனவே, 6ஜிபி ரேம் வேரியண்டை ரூ. 8,999 பட்ஜெட்டிலும், 8ஜிபி ரேம் வேரியண்டை ரூ. 10,999. இந்த போனுக்கு ரூ.12,499 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கின்றன.
Lava Storm Play 5G Specifications
6.75-இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) LCD டிஸ்ப்ளே கிடைக்கிறது. இந்த வாட்டர் டிராப் டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் HD+ தெளிவுத்திறனைக் கொண்டுள்ளது. மேலும், 260 PPI பிக்சல் அடர்த்தி, 750 பீக் பிரைட்னஸ் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. இது 50 MP பிரதான கேமரா + 2 MP இரண்டாம் நிலை கேமராவுடன் வருகிறது.
இந்த பிரதான கேமராவில் சோனி IMX752 சென்சார் மற்றும் 2K வீடியோ பதிவு உள்ளது. இந்த லாவா ஸ்டார்ம் ப்ளே 5G ஸ்மார்ட்போனில் 8 MP செல்ஃபி கேமரா உள்ளது. இந்த கேமராவில் நைட் மோட், ப்ரோ-மோட், குரூப் போட்டோ மற்றும் UHD போன்ற அம்சங்கள் கிடைக்கின்றன.
இந்த லாவா ஸ்டார்ம் ப்ளே 5G ஸ்மார்ட்போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி உள்ளது. இந்த பேட்டரியில் டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆதரவு உள்ளது. 3.5mm ஆடியோ ஜாக் கிடைக்கிறது. பாட்டம் போர்ட் செய்யப்பட்ட ஸ்பீக்கர் வழங்கப்படுகிறது. SD கார்டு ஸ்லாட் கிடைக்கிறது.
பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. மேலும், IP64 மதிப்பீட்டில் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு கிடைக்கிறது. 5G SA/NSA மற்றும் 4G VoLTE கிடைக்கிறது. Wi-Fi 802, ப்ளூடூத் 5.3 கிடைக்கிறது. நீலம் மற்றும் டைட்டானியம் வண்ணங்களில் கிடைக்கிறது.