விரைவில் அறிமுகமாகும் Motorola Edge 60 Neo ஸ்மார்ட்போன்.!

விரைவில் அறிமுகமாகும் Motorola Edge 60 Neo ஸ்மார்ட்போன்.!,Motorola Edge 60 Neo Specifications,மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ அம்சங்கள்

ிரைவில் அறிமுகமாகும் Motorola Edge 60 Neo ஸ்மார்ட்போன்.!

மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ போனை மிக விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போன் முதலில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகுதான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், "Motorola Edge 60 Neo" போனின் சில விவரக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

Motorola Edge 60 Neo Specifications

மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ அம்சங்கள்: இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ ஸ்மார்ட்போன் சிறிய "OLED" டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதன் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் நல்ல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல், இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ போன் பிரைமரி கேமரா + அல்ட்ரா வைட் லென்ஸ் + டெலிஃபோட்டோ லென்ஸ் எனப்படும் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் அறிமுகப்படுத்தப்படும். தற்போது, ​​இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. இந்த போனின் அனைத்து அம்சங்களும் விரைவில் வெளியிடப்படும். இப்போது ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனின் அம்சங்கள் மற்றும் விலை தகவல்களைப் பார்ப்போம்.
ிரைவில் அறிமுகமாகும் Motorola Edge 60 Neo ஸ்மார்ட்போன்.!

Motorola Edge 50 Neo Specifications

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அம்சங்கள்: புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் 6.4-இன்ச் 1.5K pOLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது (120Hz refresh rate), 120Hz ரெஃப்ரெஷ் ரேட், (3000 nits peak brightness),3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல காட்சி அம்சங்களைக் கொண்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது.

இதேபோல், இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் மாடலில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகம் உள்ளது. எனவே, இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை எந்த பிரச்சனையும் இல்லாமல் பயன்படுத்தலாம். இந்த போன் Pantone Nautical Blue, Pantone Latte, Pantone Poinciana, Pantone Grisaille போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது.

இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் 50MP முதன்மை கேமரா + 13MP அல்ட்ரா வைட் கேமரா + 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இது தவிர, இந்த பின்புற கேமராக்கள் 3X ஆப்டிகல் ஜூமை ஆதரிக்கின்றன.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போனில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32MP கேமரா உள்ளது. பின்னர் இந்த போனில் LED ஃபிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.

ிரைவில் அறிமுகமாகும் Motorola Edge 60 Neo ஸ்மார்ட்போன்.!

மோட்டோரோலா (Water and dust resistant) IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் MIL-STD 810H சான்றிதழையும் பெற்றுள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ சாதனம் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவுடன்  (Dual speakers)  இரண்டு ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஃபோனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், NFC மற்றும் USB டைப்-C உள்ளிட்ட பல சிறந்த அம்சங்கள் உள்ளன. இந்த மோட்டோரோலா ஃபோன் 4310mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W வேகமான சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. தற்போது, ​​இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஃபோனை ரூ.19,999 விலையில் வாங்கலாம்.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக