இது Xiaomi 17. ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், இப்போது சிங்கப்பூரின் IMDA சான்றிதழ் தளத்தில் 25113PN0EG என்ற மாடல் எண்ணின் கீழ் காணப்பட்டுள்ளது. இது Xiaomi 17 ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடு விரைவில் என்பதை குறிக்கிறது.
Xiaomi 17 இந்தியா விலை:
இது இந்தியாவில் ரூ. 56,990க்கு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது OnePlus 15, iQOO 15 மற்றும் Realme GT 8 Pro உடன் போட்டியிடும் விலையில் இது அறிமுகப்படுத்தப்படலாம்.
Xiaomi 17 ஸ்மார்ட்போனின் 12GB RAM + 256GB உள் ஸ்டோரேஜ் விருப்பம் சீனாவில் இந்திய ரூபாயில் தோராயமாக ரூ. 56,000க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி உள் ஸ்டோரேஜ் விருப்பம் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி விருப்பம் முறையே (தோராயமாக) ரூ. 60,000 மற்றும் ரூ. 62,000க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Xiaomi 17 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.3-இன்ச் 1.5கே (2656 x 1220 பிக்சல்ஸ்) OLED டிஸ்பிளே
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 300ஹெர்ட்ஸ் வரை டச் சாம்ப்ளிங் ரேட்
- 3500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 19.6:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ
- DCI-P3 கலர் கேமட்
- HDR 10+, HDR விவிட் மற்றும் "Dolby Vision"டால்பி விஷன் ஆதரவு
- HyperOS3 ஐ அடிப்படையாகக் கொண்ட Android 16 OS
- Xiaomiயின் AI கருவிகளின் தொகுப்பு, HyperAI
- 3nm Snapdragon 8 Elite Gen 5 chipset, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் 512GB வரை UFS 4.1 உள் ஸ்டோரேஜ்
- லைகாவால் டியூன் செய்யப்பட்ட டிரிபிள் பின்புற கேமரா அமைப்பு
- f/1.67 மற்றும் 23mm குவிய நீளம் கொண்ட 50-மெகாபிக்சல் முதன்மை சென்சார்
- 50-மெகாபிக்சல் (f/2.0) டெலிஃபோட்டோ லென்ஸ்
- 50-மெகாபிக்சல் (f/2.4) 102-டிகிரி FOV உடன் கூடிய அல்ட்ராவைட்-ஆங்கிள் சென்சார்
- f/2.2 மற்றும் 90-டிகிரி பார்வை புலத்துடன் கூடிய 50-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- பின்புற கேமராக்கள் 8K வீடியோக்களை 30fps இல் பதிவு செய்யும் திறன் கொண்டவை மற்றும் 4K வீடியோக்களை 60fps வரை பதிவு செய்யும் திறன் கொண்டவை.
- 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000mAh பேட்டரி
- டூயல்-பேண்ட் Wi-Fi 7
- ப்ளூடூத் 5.4 ஆதரவு
- USB 3.2 Gen 1 டைப்-C போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீடு (இது அதன் முன்னோடியை விட 10 மடங்கு அதிக எதிர்ப்புத் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது)
- 151.1x71.8x8.06mm பரிமாணங்கள்
- தோராயமாக 191 கிராம் எடை