ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் வெளியீடான ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் (iPhone 18 Pro Series) ஸ்மார்ட்போன்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் கசியத் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளது. | Apple iPhone 18 Pro series likely to debut with subtle design tweaks and powerful upgrades.
Apple iPhone 18 Pro Specifications
இணையத்தில் லீக் ஆன (leak) புதிய தகவல்களின்படி, இந்த முறை ஆப்பிள் நிறுவனம் வழக்கமான ஐபோன் 18 மாடலைத் தவிர்த்துவிட்டு, நேரடியாக ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) மற்றும் ப்ரோ மேக்ஸ் (Pro Max) மாடல்களை மட்டுமே அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.
டிசைனைப் பொறுத்தவரை அலுமினியம் ஃபிரேம் மற்றும் பின்பக்கத்தில் சிங்கிள் கிளாஸ் ஃபினிஷ் (Unified glass finish) கொடுக்கப்படலாம். புதிய நிறங்களாக பர்கண்டி (Burgundy), பர்ப்பிள் மற்றும் காபி பிரவுன் கலர்கள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.
டிஸ்பிளேவில் டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) அளவு சற்று சிறியதாகக் குறைக்கப்படலாம் எனத் தெரிகிறது. ப்ரோ மாடலில் 6.3 இன்ச் ஓலெட் டிஸ்பிளேவும் (OLED display), ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.9 இன்ச் ஓலெட் டிஸ்பிளேவும் இடம்பெறும். மேலும் இவை இரண்டும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) ஆதரவைக் கொண்டிருக்கும்.
Apple iPhone 18 Pro Processor
செயல்திறனில் மாஸ் காட்டுவதற்காக, ஆப்பிளின் புதிய 2 நானோமீட்டர் தொழில்நுட்பத்தில் (2nm process) உருவான ஏ20 ப்ரோ சிப்செட் (Apple A20 Pro processor) இதில் பொருத்தப்பட உள்ளது. இது முந்தைய மாடல்களை விட 15 சதவீதம் அதிக வேகம் மற்றும் 30 சதவீதம் சிறப்பான பேட்டரி திறனை வழங்கும்.
பேட்டரியைப் பொறுத்தவரை, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலானது நீண்ட நேரம் உழைக்கக்கூடிய 5100எம்ஏஹெச் முதல் 5200எம்ஏஹெச் வரையிலான பேட்டரி (5200mAh battery) அளவைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய ட்ரெண்டிங்: 👉 மார்க்கெட்டை தெறிக்கவிடும் Samsung! ஆசம் ஏஐ, 50எம்பி கேமராவுடன் வெளியான Galaxy A57 5G மற்றும் A37 5G!
Apple iPhone 18 Pro Camera
ஐபோன் என்றாலே கேமரா தான் (Camera) மிகப்பெரிய ஹைலைட். அந்த வகையில் இந்த புதிய சீரிஸில் 48 மெகாபிக்சல் மெயின் கேமரா (48MP primary camera), 48எம்பி அல்ட்ரா வைடு மற்றும் 48எம்பி டெலிபோட்டோ என அட்டகாசமான ட்ரிபிள் கேமரா செட்டப் (Triple camera setup) இடம்பெறவுள்ளது.
மேலும் மெயின் கேமராவில் வேரியபிள் அபெர்ச்சர் (Variable aperture) வசதி மற்றும் சாம்சங் நிறுவனம் உருவாக்கிய புதிய இமேஜ் சென்சாரும் (Image sensor) இதில் பயன்படுத்தப்பட உள்ளது.
Apple iPhone 18 Pro Price in India
OPINION - இந்த ஐபோன் 18 ப்ரோ மாடலுக்காக காத்திருக்கலாமா?
ஆப்பிள் போன் வாங்க நினைப்பவர்களுக்கு செப்டம்பர் மாதம் எப்போதுமே ஒரு திருவிழா தான். இந்த முறை சாதாரண மாடலை விட்டுவிட்டு, நேரடியாக ப்ரோ மாடல்களில் அதிக கவனம் செலுத்துவது ஆப்பிளின் புதிய வியூகமாகப் பார்க்கப்படுகிறது.
புதிய ஏ20 ப்ரோ சிப்செட் (New processor) மற்றும் கேமரா மேம்பாடுகள் பெர்ஃபார்மன்ஸ் பிரியர்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும். இந்த புதிய ஐபோன்களின் விலை முந்தைய சீரிஸை போலவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது இதன் ஆரம்ப விலை இந்தியாவில் ரூ.1,34,900 (Price in India) ஆக இருக்க வாய்ப்புள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த கேமராவை (Best camera phone) தேடுபவர்கள் தாராளமாக இந்த மாடலுக்காகக் காத்திருக்கலாம்.
😲 இதையும் மிஸ் பண்ணிடாதீங்க: 👉 போன் சூடாக வாய்ப்பே இல்லை! ஆக்டிவ் கூலிங் ஃபேன், கேமிங் பட்டன்களுடன் களமிறங்கும் புதிய Oppo 5G போன்!
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் முக்கிய அம்சங்கள்:
- 6.3 இன்ச் / 6.9 இன்ச் ப்ரோமோஷன் ஓலெட் டிஸ்பிளே (ProMotion OLED display)
- சிறிய அளவிலான டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island)
- புதிய ஆப்பிள் ஏ20 ப்ரோ சிப்செட் (Apple A20 Pro processor)
- 48எம்பி + 48எம்பி + 48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா
- வேரியபிள் அபெர்ச்சர் மற்றும் சாம்சங் இமேஜ் சென்சார்
- 5100mAh - 5200mAh பேட்டரி (5200mAh battery) திறன்.
- பர்கண்டி மற்றும் பர்ப்பிள் போன்ற புதிய கலர் ஆப்ஷன்கள்.
