Amazon AI Store அறிமுகம் மற்றும் முழு விபரங்கள்

ஸ்மார்ட் ஷாப்பிங்கில் புதிய புரட்சி! AI சாதனங்களை எளிதாகத் தேடி வாங்க அமேசான் ஆப்பில் அதிரடியாக அறிமுகமாகியுள்ள புதிய AI Store குறித்த முழு விபரங்கள்.

Amazon AI Store அறிமுகம் மற்றும் முழு விபரங்கள், amazon ai store launched in india smart shopping ai powered devices list update in tamil

இந்திய இ-காமர்ஸ் சந்தையில் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்தி வரும் அமேசான் நிறுவனம், தற்போது ஒரு அட்டகாசமான புதிய ஷாப்பிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மற்ற நிறுவனங்களை வெச்சி செஞ்சிட்டாங்க என்று சொல்லும் அளவிற்கு அமேசான் ஏஐ ஸ்டோர் (Amazon AI Store) பிரத்தியேகமாக வெளியாகியுள்ளது.

Amazon AI Store அறிமுகம் மற்றும் முழு விபரங்கள்

அதாவது, செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் கொண்ட அதிநவீன ஸ்மார்ட் சாதனங்களை எளிதாகத் தேடி வாங்குவதற்காக இந்த ஏஐ ஸ்டோர் (AI Store microsite) அமேசான் ஆப் மற்றும் இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

AI Powered Devices

செயற்கை நுண்ணறிவு சாதனங்கள்: (AI powered devices) இந்த புதிய அமேசான் ஏஐ ஸ்டோரில் பிரத்தியேகமாக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட லேப்டாப்கள், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் (smartwatches, smart TVs) மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் மட்டுமே பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப எந்த டிவைஸ் சிறந்தது என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள, ஒவ்வொரு சாதனத்திலும் ஏஐ தொழில்நுட்பம் (AI features and tools) எப்படி வேலை செய்கிறது என்ற விளக்கங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலை காக்கும் ஆப்பிள்: 👉 இயற்கையை காக்க Apple-ன் பிரம்மாண்ட திட்டம்! 30 சதவீத ரீசைக்கிள் பொருட்களுடன் வெளியாகும் புதிய டிவைஸ்கள்!

amazon ai store launched in india smart shopping ai powered devices list update in tamil

Smart Shopping Experience

ஸ்மார்ட் ஷாப்பிங் அனுபவம்: (Smart shopping experience) வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்க இந்த ஏஐ ஸ்டோரில் ரூபஸ் மற்றும் லென்ஸ் ஏஐ (Rufus and Lens AI) போன்ற பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் உங்களின் வீட்டின் அளவிற்கு ஏற்ப ஸ்மார்ட் டிவி அல்லது ஏசி போன்ற சாதனங்களை விர்ச்சுவலாக (View in Your Room) பொருத்திப் பார்த்து வாங்க முடியும். இது வாடிக்கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் சிறந்த வசதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதிரடி கிளவுட் கேமிங்: 👉 விலையுயர்ந்த கம்ப்யூட்டர் இனி தேவையில்லை! கம்மி விலையில் மிரட்ட வந்த Nvidia GeForce Now.. எவ்ளோ தெரியுமா?

amazon ai store launched in india smart shopping ai powered devices list update in tamil

Popular AI Devices List

பிரபலமான ஏஐ சாதனங்கள்: (Popular AI devices list) இந்த பிரத்தியேக ஸ்டோரில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra), ஒன்பிளஸ் நார்டு 6, லெனோவா யோகா ஸ்லிம் 7, ஐபேட் 11 (iPad 11) மற்றும் ஹெச்பி ஆம்னிபுக் அல்ட்ரா போன்ற மாஸான ஏஐ சாதனங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

ஸ்மார்ட்போன்களில் உள்ள தனிப்பட்ட டேட்டாவை பாதுகாக்கவும், லேப்டாப்களில் பிரம்மாண்டமான பேட்டரி (extend battery life) ஆயுளை நீட்டிக்கவும் இந்த ஏஐ தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என அமேசான் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக