"RBI New UPI Rules" UPI பணப் பரிவர்த்தனையில் RBI கொண்டுவந்த 1 மணி நேர புதிய விதி: இந்தியாவில் ஸ்மார்ட்போன் மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை (Digital transactions) நாளுக்கு நாள் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அதே வேளையில், வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணத்தைப் பறிக்கும் ஆன்லைன் மோசடிகளும் பெருகி வருகின்றன. இதனால் வங்கி வாடிக்கையாளர்களை உஷார் படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) தற்போது ஒரு அட்டகாசமான புதிய பாதுகாப்பு வசதியை பரிந்துரைத்துள்ளது.
UPI பணப் பரிவர்த்தனையில் RBI கொண்டுவந்த 1 மணி நேர புதிய விதி
ஆன்லைன் திருடர்களை வெச்சி செஞ்சிட்டாங்க என்று சொல்லும் அளவிற்கு, உங்களின் உழைத்த பணத்தை முழுமையாகப் பாதுகாக்க புதிய யூபிஐ விதிமுறைகளை (New UPI rules) ஆர்பிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக அதிக தொகைகளை அனுப்பும்போது நடக்கும் தில்லுமுல்லுகளைத் தடுக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் பணம் இனி 100 சதவீதம் பாதுகாப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1-Hour Pause on UPI Payments
1 மணி நேர தாமதம்: (1-hour pause on payments) இனிமேல் உங்கள் வங்கி கணக்கில் இருந்து, எந்தவொரு புதிய நபருக்கோ அல்லது தெரியாத கணக்கிற்கோ ரூ.10,000-க்கு மேல் (Above Rs. 10,000) பணம் அனுப்பினால், அந்த பணம் உடனடியாகச் சென்று சேராது. இதற்காக சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும் (1-hour waiting period) என்ற பிரம்மாண்டமான புதிய விதியை ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ளது.
இந்த நேரத்தில் உங்கள் கணக்கில் பணம் கழிக்கப்பட்டாலும், பெறுநருக்கு உடனே செல்லாது. இந்த இடைவெளியில் மோசடி எனத் தெரிந்தால் பரிவர்த்தனையை கேன்சல் (Cancel transaction) செய்து பணத்தை நீங்களே திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஸ்மார்ட் ஷாப்பிங் அப்டேட்: 👉 கம்ப்யூட்டர் முதல் மொபைல் வரை! அமேசான் அறிமுகம் செய்துள்ள புதிய AI ஸ்டோர்.. வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும்!
Merchant Payments Exemption
வியாபாரிகளுக்கான கட்டணங்களுக்கு விலக்கு: (Merchant payments exemption) இந்த புதிய ரூல்ஸ் எல்லா பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தாது. கடைகளில் கியூஆர் கோடு ஸ்கேன் (QR code payments) செய்து வாங்குவது மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கான மெர்சன்ட் பேமெண்ட்களுக்கு (P2M transactions) இந்த தாமதம் இருக்காது.
எனவே, ரூ.10,000-க்கு குறைவான (Below Rs. 10,000) உங்கள் அன்றாட யூபிஐ பேமெண்ட்கள் மற்றும் ஆட்டோ பேமெண்ட்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என ரிசர்வ் வங்கி தெளிவாக அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழலை காக்கும் ஆப்பிள்: 👉 இயற்கையை காக்க Apple-ன் பிரம்மாண்ட திட்டம்! 30 சதவீத ரீசைக்கிள் பொருட்களுடன் வெளியாகும் புதிய டிவைஸ்கள்!
Trusted Person Authentication
நம்பகமான நபர் அங்கீகாரம்: (Trusted person authentication) முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பிற்காக, ரூ.50,000-க்கு மேற்பட்ட (Above Rs. 50,000) பணப் பரிவர்த்தனைகளைச் செய்யும்போது கூடுதலாக ஒரு பாதுகாப்பு வசதி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர்கள் முன்கூட்டியே நியமித்த நம்பகமான நபரின் (Trusted contact) ஒப்புதலைப் பெற்ற பிறகே பணம் அனுப்ப முடியும் என்ற அட்டகாசமான சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Digital Payment Kill Switch
டிஜிட்டல் பேமெண்ட் முடக்கம்: (Digital payment kill switch) உங்கள் வங்கிக் கணக்கில் மோசடி நடப்பதாகச் சந்தேகம் வந்தால், உடனடியாக உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்ட அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளையும் (Block digital payments) ஒரே கிளிக்கில் முடக்கும் கில் ஸ்விட்ச் (Kill switch feature) என்ற பிரத்யேக வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒருவேளை இதை முடக்கிவிட்டால், மீண்டும் ஆக்டிவேட் செய்ய வாடிக்கையாளர்கள் நேரடியாக வங்கி கிளைக்குச் (Bank branch visit) செல்ல வேண்டும். ஆன்லைன் மோசடிகளை அடியோடு ஒழிக்க கொண்டுவரப்பட்ட இந்த மாஸான விதிமுறைகள் விரைவில் முழுமையாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.