இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை (Digital transactions) நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் ஆன்லைன் மோசடிகளும் அதிகமாகி வருகின்றன. மக்களை உஷார் படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) தற்போது ஒரு அதிரடியான அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
இனி பணம் அனுப்ப 1 மணி நேரம் தாமதம்.. RBI-புதிய ரூல்ஸ்!
மற்ற ஆன்லைன் மோசடிக்காரர்களை வெச்சி செஞ்சிட்டாங்க என்று சொல்லும் அளவிற்கு, பணத்தை பாதுகாப்பாக அனுப்ப புதிய யூபிஐ விதிமுறைகளை (New UPI rules) ஆர்பிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மக்களின் பணம் இனி பாதுகாப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
New 1-Hour Delay Rule
1 மணி நேர தாமதம்: (1-hour delay rule) இனிமேல் உங்கள் வங்கி கணக்கில் இருந்து, எந்தவொரு புதிய நபருக்கோ அல்லது தெரியாத கணக்கிற்கோ ரூ.50,000-க்கு மேல் (Above Rs. 50,000) பணம் அனுப்பினால், அந்த பணம் உடனே சென்று சேராது.
இதற்காக ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும் (1-hour waiting period) என்ற புதிய விதியை ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த நேரத்தில், நீங்கள் பணத்தை தவறுதலாக அனுப்பிவிட்டீர்களா அல்லது யாராவது ஏமாற்றுகிறார்களா என்பதை செக் செய்து கொள்ள (Check and verify) முடியும்.
டிசைனிங்கில் புதிய புரட்சி: 👉 டிசைனிங்கில் செம ஷாக் கொடுக்கும் கேன்வா! அதிரடியாக அறிமுகமான புதிய Canva AI 2.0.. வெச்சி செஞ்சிட்டாங்க!
Transaction Cancellation and Warning
பரிவர்த்தனை ரத்து மற்றும் எச்சரிக்கை: (Transaction cancellation) ஒருவேளை சந்தேகம் இருந்தால், அந்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே உங்களால் அந்த யூபிஐ பரிவர்த்தனையை (UPI transaction) உடனடியாக கேன்சல் செய்து பணத்தை திரும்பப் பெற முடியும்.
மேலும், மோசடிக்காரர்களிடம் பணம் செல்கிறது என வங்கிக்கு சந்தேகம் வந்தால், உங்களுக்கு உடனடியாக வார்னிங் மெசேஜ் (Warning message) வரும் வகையில் புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Merchant Payments Exemption
வியாபாரிகளுக்கான பேமெண்ட்கள் விதிவிலக்கு: (Merchant payments exemption) இந்த புதிய ரூல்ஸ் எல்லா பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தாது. கடைகளில் கியூஆர் கோடு ஸ்கேன் (QR code scanning) செய்து வாங்குவது மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் (Online shopping) செய்வதற்கான மெர்சன்ட் பேமெண்ட்களுக்கு இந்த ஒரு மணி நேர தாமதம் இருக்காது.
எனவே, உங்களின் அன்றாட யூபிஐ பேமெண்ட்கள் (Daily UPI payments) எந்த வகையிலும் பாதிக்கப்படாது என ரிசர்வ் வங்கி தெளிவாக அறிவித்துள்ளது.
ஸ்மார்ட் ஷாப்பிங் அப்டேட்: 👉 கம்ப்யூட்டர் முதல் மொபைல் வரை! அமேசான் அறிமுகம் செய்துள்ள புதிய AI ஸ்டோர்.. வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும்!
Whitelist Trusted Accounts
நம்பகமான கணக்குகளைச் சேர்த்தல்: (Whitelist trusted accounts) நீங்கள் அடிக்கடி பணம் அனுப்பும் நண்பர்கள் அல்லது உறவினர்களின் வங்கி கணக்குகளை 'வயிட் லிஸ்ட்' (Whitelist features) பிரிவில் சேர்த்துக்கொள்ளும் அட்டகாசமான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இப்படி சேர்க்கப்பட்ட நம்பகமான கணக்குகளுக்கு (Trusted bank accounts) பணம் அனுப்பினால், இந்த 1 மணி நேர தாமதம் இருக்காது. எந்தவித தடையுமின்றி உடனே பணம் சென்று சேரும் வகையில் இந்த சிஸ்டம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் திருட்டுகளை ஒழிக்க கொண்டுவரப்பட்ட இந்த அதிரடியான விதிமுறைகள் விரைவில் முழுமையாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
