Redmi K90 Max & K Pad 2 மாஸ் Specs லீக்: முழு விபரம்!: கேமிங் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சந்தையை ஒட்டுமொத்தமாக அதிரவைக்கும் நோக்கத்தோடு, சியோமி நிறுவனம் தனது புதிய மிரட்டலான கேமிங் சாதனங்களின் வருகையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போன் (Redmi K90 Max smartphone) மற்றும் ரெட்மி கே பேட் 2 டேப்லெட் (Redmi K Pad 2 tablet) ஆகிய இரண்டு கேமிங் அசுரன்களின் விபரங்கள் இணையத்தில் வெறித்தனமாக ட்ரெண்டாகி வருகிறது.
Redmi K90 Max and K Pad 2 Specifications
முழுமையான சிறப்பம்சங்கள்: வாங்குனா இப்படி ஒரு காம்போ வாங்கனும் என்று சொல்லும் அளவிற்கு, இது ஒரு சாதாரண வெளியீடு அல்ல. அதிநவீன கேமிங் தொழில்நுட்பங்களை (Advanced gaming technologies) ஒன்றாகச் சேர்த்த ஒரு மிரட்டலான பேக்கேஜ் ஆகும். எந்த டிவைஸ் வாங்கலாம் என குழப்பத்தில் இருப்பவர்களுக்காக, இந்த இரண்டு புதிய சாதனங்களின் துல்லியமான விபரங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.
💰 முதலீட்டு டிப்ஸ்: 👉 முதிர்வு காலம் வரைக்கும் காத்திருக்க முடியாது, மாதா மாதம் வட்டி கைக்கு வரணும்னு நினைக்கிறீங்களா? அப்போ SBI-யோட இந்த அட்டகாசமான திட்டத்தை உடனே பாருங்க!
Redmi K90 Max Display Details
ஸ்மார்ட்போன் திரை விபரம்: புதிய கே90 மேக்ஸ் மொபைலின் மிக முக்கியமான ஹைலைட் இதன் பிரம்மாண்டமான திரை தான். மிகச்சிறந்த கேமிங் அனுபவத்திற்காக, இதில் அதிவேக 165 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி டிஸ்பிளே (165Hz OLED display) வழங்கப்பட்டுள்ளது. பிஜிஎம்ஐ போன்ற கடினமான கேம்களை (Heavy games) எவ்வித லேக் இன்றி தடையின்றி விளையாட இது பெரிதும் உதவும்.
Dimensity 9500 Processor Performance
கதிகலங்கும் பெர்ஃபார்மன்ஸ்: இந்த மொபைலின் வேகத்தை வேற லெவலுக்குக் கொண்டு செல்ல, இதில் முரட்டுத்தனமான மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட் (Dimensity 9500 processor) பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஸ்பேஸ் சில்வர் நிறத்தில் அலுமினியம் பிரேமுடன் வெளிவரும் இதில், அதிகபட்ச பாதுகாப்பிற்காக IP69 ரேட்டிங் (IP69 rating) வழங்கி வாடிக்கையாளர்களை வெச்சி செஞ்சிட்டாங்க.
Built-in Cooling Fan System
கூலிங் ஃபேன் ஸ்பெக்ஸ்: நீண்ட நேரம் கேம் விளையாடும்போது போன் சூடாவதைத் தடுக்க, இதில் பிரத்யேகமாக 18.1மிமீ இன்பில்ட் கூலிங் ஃபேன் (Built-in cooling fan) பொருத்தப்பட்டுள்ளது. இது மிகக் குறைந்த சத்தத்துடன் செயல்பட்டு, வெறும் 100 வினாடிகளில் போனின் வெப்பத்தை அதிரடியாகக் குறைக்கும் திறன் கொண்ட மாஸான தொழில்நுட்பமாகும்.
🔥 மிஸ் பண்ணிடாதீங்க: 👉 புதுசா போன் வாங்க போறீங்களா? அப்போ 9000mAh ராட்சத பேட்டரியோட ஒன்பிளஸ் வெச்சி செஞ்சிருக்க புது போனை பத்தி தெரிஞ்சுக்காம வேற போன் வாங்காதீங்க!
Redmi K Pad 2 Tablet Display
கேமிங் டேப்லெட் திரை: ஸ்மார்ட்போனுக்கு இணையாக, கேமிங் பிரியர்களுக்காக பிரத்யேகமாக ரெட்மி கே பேட் 2 என்ற புதிய அட்டகாசமான டேப்லெட்டையும் (Gaming tablet) ரெட்மி நிறுவனம் களமிறக்குகிறது. ஒரு கையில் எளிதாகப் பிடிக்கும் வகையில் 8.8 இன்ச் அளவிலான எலக்ட்ரிக் பர்பிள் நிற டிஸ்பிளேவுடன், இதிலும் அதிவேக 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate) கொடுக்கப்பட்டுள்ளது.
Massive 9100mAh Battery Specs
ராட்சத பேட்டரி திறன்: பல மணி நேரம் தடையின்றி தொடர்ந்து கேம் விளையாடுவதற்காக, இந்த டேப்லெட்டில் 9100எம்ஏஎச் அளவிலான ராட்சத பேட்டரி (Massive 9100mAh battery) பொருத்தப்பட்டுள்ளது. மேலும், தட்டையான கேமரா பின்புறம் மற்றும் ஒற்றை உலோக வடிவமைப்பின் (Unibody metal design) மூலம் இந்த டிவைஸ் பார்ப்பதற்கு மிகவும் பிரீமியமாக காட்சியளிக்கிறது.
Launch Date and Expectations
வெளியீடு மற்றும் எதிர்பார்ப்பு: கேமிங் பிரியர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையிலான இந்த இரண்டு புதிய மாஸான சாதனங்களும், இந்த மாதம் இறுதியில் உலகளவில் அறிமுகமாகவுள்ளன (Global launch). இதன் அதிரடியான சிறப்பம்சங்களைப் பார்க்கும்போது, இது இந்திய சந்தையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என டெக் வட்டாரங்களில் உறுதியாகப் பேசப்படுகிறது.


