தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 (Tamil Nadu 2026 elections) மிக விரைவில் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களை உஷார் படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை (Voter ID card) இல்லாதவர்கள் ஓட்டுப் போட முடியாது என்ற கவலையைத் தீர்க்கும் வகையில் இந்த அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
TN Election 2026: ஓட்டுப் போட இந்த 12 ஆவணங்கள் போதும்
அதாவது, உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் (Electoral roll) இருந்தால் மட்டும் போதும், உங்களிடம் வாக்காளர் அட்டை இல்லையென்றாலும் கூட நீங்கள் எந்தவித தடையுமின்றி ஓட்டுப் போட முடியும். இதற்காக 12 வகையான மாற்று அடையாள ஆவணங்களை (12 valid ID options) தேர்தல் ஆணையம் தற்போது அங்கீகரித்துள்ளது.
Approved ID Proofs for Voting
ஓட்டுப் போட அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள்: (Approved ID proofs for voting) வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் தங்களின் ஆதார் கார்டு, பான் கார்டு அல்லது பாஸ்போர்ட் (Aadhaar, PAN, Passport) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வாக்குச்சாவடியில் காண்பித்து தங்களின் வாக்கைச் செலுத்தலாம்.
மேலும் ஓட்டுநர் உரிமம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக பாஸ்புக் (Driving license and bank passbook) போன்ற ஆவணங்களும் ஓட்டுப் போடுவதற்கு தற்போது ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஆன்லைன் மோசடி உஷார்: 👉 UPI பயனர்களுக்கு செம ஷாக்! இனி ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்பினால் 1 மணி நேரம் தாமதம்!
Alternative Documents Allowed
அனுமதிக்கப்பட்ட மாற்று ஆவணங்கள்: (Alternative documents allowed) இதுமட்டுமின்றி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை, மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு (Health insurance smart card) மற்றும் புகைப்படத்துடன் கூடிய பென்ஷன் ஆவணங்கள் போன்றவையும் ஓட்டுப் போட அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் (Official ID cards) மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளைக் காண்பித்தும் பொது மக்கள் எளிதாக வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமிங் பிரியர்களுக்கு ட்ரீட்: 👉 கேமிங் உலகை மிரட்ட வரும் OnePlus! அதிரடியான கண்ட்ரோலருடன் வெளியாகும் புதிய OnePlus Ace 6 Ultra!
Election Commission Verification
தேர்தல் ஆணையத்தின் சரிபார்ப்பு: (Election commission verification) இந்த மாற்று ஆவணங்களைக் காண்பிக்கும் போது, உங்களின் பெயர் கண்டிப்பாக வாக்காளர் பட்டியலில் (Voter list verification) இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது மிக முக்கியமாகும். பெயர் இருந்தால் மட்டுமே இந்த 12 ஆவணங்கள் (12 valid documents) ஓட்டுச்சாவடியில் செல்லுபடியாகும்.
தேர்தல் நடைபெறும் நாளில் வாக்குச்சாவடிக்குச் செல்லும் போது, மேலே கூறப்பட்டவற்றில் ஏதாவது ஒரு அசல் ஆவணத்தை (Original identity proof) கையில் எடுத்துச் செல்வது அவசியமாகும். கள்ள ஓட்டுகளை வெச்சி செய்வதற்கு இந்த மாஸான பாதுகாப்பு முறை மிகவும் உதவியாக இருக்கும்.
Voter Slip and Polling Details
வாக்காளர் சீட்டு மற்றும் வாக்குப்பதிவு: (Voter slip and polling) தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தால் வீடு வீடாக வழங்கப்படும் பூத் ஸ்லிப் (Voter slip) ஒரு அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வாக்குப்பதிவு மையத்திற்குச் (Polling station) செல்லும்போது கட்டாயமாக இந்த 12 ஐடி கார்டுகளில் (Valid ID cards) ஏதேனும் ஒன்றைக் கொண்டு செல்ல வேண்டும். ஜனநாயக கடமையாற்ற அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.