🤯 வெறும் ரூ.5 எக்ஸ்ட்ரா.! அம்பானியின் மாஸ் Jio OTT பாஸ்!

Reliance Jio OTT Pass Tamil: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.195 மற்றும் ரூ.200 டேட்டா பேக்குகளின் நன்மைகள் மற்றும் ஏன் ரூ.200 பிளான் பெஸ்ட் என்ற முழு விபரம்.

Reliance Jio OTT Pass Rs 200 Plan Benefits vs Rs 195 Pack Tamil

Jio OTT Pass
: முகேஷ் அம்பானி தலைமையிலான, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), அதன் பயனர்களுக்காக ரூ.195 மற்றும் ரூ.200 விலையிலான டேட்டா பேக்குகளை (Data packs) வழங்குகிறது. இந்த இரண்டு டேட்டா வவுச்சர்களில் (Data vouchers) ரூ.200 பிளான் ஆனது ஓடிடி பாஸ் என்று அழைக்கப்படுகிறது.

மேலும் இந்த ரூ.200 பிளான் (Rs 200 Plan) ஆனது வெறும் ரூ.5 எக்ஸ்ட்ரா பணத்தில் வாடிக்கையாளர்களுக்கு மிக அதிக நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கிறது. அப்படி என்ன நன்மைகள் மற்றும் பலன்கள் கிடைக்கிறது? ரூ.5 கூடுதல் பணம் செலுத்தி ரூ.200 டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்யுமாறு நாங்கள் ஏன் பரிந்துரைக்கிறோம்; அதற்கு தகுந்த காரணம் என்ன? இதோ முழு விவரங்கள்: 

Reliance Jio OTT Pass

இது வெறுமனே ஒரு ஓடிடி பிளான் அல்ல.. அம்பானியின் மாஸ்டர் பிளான்: இது போன்ற சிறப்பு டேட்டா பேக்குகள், ஒரு பயனரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாயை (ARPU - Average Revenue Per User) அதிகரிக்க ஜியோவுக்கு பெரிதும் உதவுகின்றன. ஓடிடி தளங்களுக்கு (OTT Platforms) ஏற்கனவே மாதாந்திர சந்தா செலுத்தும் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு, ஜியோ இந்த புதிய Reliance Jio OTT Pass திட்டத்தை மிகவும் திட்டமிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. சரி வாருங்கள் இப்போது ​​ஏன் ரூ.200 திட்டம் சிறந்தது என்பதையும், ரூ.195 உடனான ஒரு ஒப்பீட்டையும் பார்ப்போம்.

இதுவும் படியுங்கள்: Redmi Turbo 5 ஜூன் 16-ல் வெளியீட்டு விலை, விவரக்குறிப்புகள்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.200 டேட்டா பேக்கின் நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.200 திட்டம் ஆனது ஓடிடி பாஸ் (OTT pass) என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அதிவேக 4ஜி டேட்டாவுடன் (4G Data) ஏராளமான ஓடிடி தளங்களுக்கான அணுகலையும் இது வழங்குவதால், ஜியோ நிறுவனம் இத்திட்டத்தை ஓடிடி பாஸ் என்று முன்னிலைப்படுத்துகிறது.

இந்த ரூ.200 திட்டம் மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தைக் (Validity) கொண்டுள்ளது. இத்திட்டத்தில் பயனர்களுக்கு 30ஜிபி டேட்டா (30GB Data) கிடைப்பதுடன், YouTube Premium, Amazon Prime Video, JioHotstar, SonyLIV, ZEE5, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanccha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, FanCode, Times Play, Tarang Plus மற்றும் JioTV போன்ற ஏகப்பட்ட ஓடிடி நன்மைகளும் கிடைக்கின்றன.

Jio Rs 200 Plan

ஜியோ ரூ.200 திட்டத்தின் முக்கிய விதிகளின் விவரம்: எந்தவொரு சாதாரண டேட்டா பேக்கை போலவும், இந்த Jio Rs 200 Plan திட்டமும் கூட, பயனரிடம் ஏற்கனவே சர்வீஸ் வேலிடிட்டி கொண்ட பேஸிக் ப்ரீபெய்ட் திட்டம் (Base prepaid plan) ஆக்டிவ் ஆக இருந்தால் மட்டுமே, அதற்கு மேல் இதை ரீசார்ஜ் செய்ய முடியும். அதாவது இதன் 28 நாள் வேலிடிட்டி என்பது ஓடிடி நன்மைகளுக்கான வேலிடிட்டி ஆகும்; டேட்டா பேக்கின் வேலிடிட்டி அல்ல.

மேலும் இதன்கீழ் எஸ்எம்எஸ் (SMS) மற்றும் வாய்ஸ் காலிங் (Voice calling) நன்மைகள் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் ஐபிடிவி (IPTV) தொழில்நுட்பம் மூலம் 1000-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை நீங்கள் இலவசமாக அணுகலாம்; இவைகள் அனைத்தும் முற்றிலும் நேரடி லைவ் டிவி சேனல்கள் (Live TV channels) ஆகும்.

இதுவும் படியுங்கள்: Vivo X Fold 6 Launch Date: அதிரடியாக வரும் விவோ 5G போன்!

Reliance Jio OTT Pass Rs 200 Plan Benefits vs Rs 195 Pack Tamil

Jio Rs 195 Plan

ஜியோ ரூ.195 டேட்டா பேக்கின் நன்மைகள் விபரம்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.195 டேட்டா பேக்கிலும் ஓடிடி பலன் அடங்கியுள்ளது. இருப்பினும், இந்த புதிய Jio Rs 195 Plan திட்டத்தில் JioHotstar-க்கான அணுகல் மட்டுமே வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. இந்த ரூ.195 டேட்டா பேக்கின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும். இத்திட்டத்தில் பயனர்களுக்கு மொத்தமாக 15ஜிபி டேட்டா (15GB Data) மட்டுமே கிடைக்கிறது.

ஆனால் இந்த திட்டத்துடன் 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (JioHotstar Mobile subscription) பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் 15ஜிபி டேட்டாவும் பக்கா 4ஜி டேட்டா ஆகும். மேலும் பயனரிடம் ஏற்கனவே ஒரு அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் (Base prepaid plan) செயல்பாட்டில் இருந்தாலும் மட்டுமே இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடியும். வழக்கம் போல இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ், வாய்ஸ் கால்கள் (Voice calls) எதுவும் இல்லை.

Jio Best Data Pack 2026

இந்த இரண்டில் ரூ.200 மதிப்பிலான டேட்டா பேக் ஏன் சிறந்தது: இந்த இரண்டில் ரூ.200 மதிப்பிலான பேக் அதிக டேட்டா மற்றும் கூடுதல் ஓடிடி பலன்களை வழங்குகிறது; அதே சமயம் இதன் விலையும் ஏறக்குறைய ஒன்றுதான். இன்றைய காலகட்டத்தில் யூட்யூப் பிரீமியம் (YouTube Premium) ஒரு சிறந்த ஓடிடி பலனாக கருதப்படுகிறது, ஏனெனில் கிட்டத்தட்ட அனைவரும் தினமும் யூட்யூப்-ஐ பயன்படுத்துகிறார்கள்.

தேவையற்ற விளம்பரங்கள் (Ads) காரணமாக ஆன்லைனில் உங்கள் வாழ்க்கையின் பொன்னான நேரம் வீணாவதை இந்த பிரீமியம் சந்தா மிக எளிமையாக தடுக்கும். இதுவும் படியுங்கள்: Airtel, Jio-வுக்கு டஃப் பைட்.! இந்த 3 மாவட்டத்துலயும் Vi 5G சேவைகள்!

எனவே, இந்த இரண்டில் ரூ.200 மதிப்பிலான டேட்டா பேக் அதிக டேட்டா மற்றும் கூடுதல் ஓடிடி பலன்களை வழங்குகிறது; அதே சமயம் இதன் விலையும் ஏறக்குறைய ஒன்றுதான். இன்றைய காலகட்டத்தில் யூட்யூப் பிரீமியம் ஒரு சிறந்த ஓடிடி பலனாக கருதப்படுகிறது, ஏனெனில் கிட்டத்தட்ட அனைவரும் யூட்யூப்-ஐ பயன்படுத்துகிறார்கள்; விளம்பரங்கள் காரணமாக உங்கள் வாழ்க்கையின் பொன்னான நேரம் வீணாவதை இந்த சந்தா எளிமையாக தடுக்கும்.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக