Google Pixel 10 Price Drop: பவர்ஃபுல்லான ஓஐஎஸ் கேமரா, 120X டிஜிட்டல் ஜூமிங், 7 வருட ஓஎஸ் அப்டேட்கள் கொண்ட ஒரு பிரீமியம் போனை பட்ஜெட் விலையில் வாங்க காத்துக்கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான செம செய்திதான் இது! கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10) ஸ்மார்ட்போன் இப்போது பிளிப்கார்ட் (Flipkart) ஆன்லைன் தளத்தில் அதிரடி தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு பிரியர்களைக் கவரும் இதன் சிறப்பம்சங்கள் மற்றும் பிளிப்கார்ட் ஆஃபர் விவரங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.
Google Pixel 10 Specifications
கூகுள் பிக்சல் 10 அம்சங்கள்: பவர்ஃபுல்லான ஹார்ட்வேர் மற்றும் மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் (Advanced AI Features) வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் அளவிலான அமோலெட் திரை (6.3-inch AMOLED Display) வழங்கப்பட்டுள்ளது. இது 1080 x 2424 பிக்சல்கள் ரெசொலூஷன் (1080 x 2424 Pixels Resolution), எஃப்ஹெச்டி பிளஸ் தரம் (FHD+ Quality), 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (3000 nits Peak Brightness) ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும், 422 பிபிஐ பிக்சல் டென்சிட்டி (422 PPI Pixel Density) மற்றும் எச்டிஆர் சப்போர்ட் (HDR Support) வழங்கப்பட்டுள்ளதால், வீடியோக்கள் மற்றும் கேமிங் அனுபவம் சிறப்பாக இருக்கும்.
திரை பாதுகாப்பிற்காக கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) வழங்கப்பட்டுள்ளது. செயல்திறனைப் பொறுத்தவரை, 3 நானோமீட்டர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கூகுள் டென்சார் ஜி5 சிப்செட் (3nm Google Tensor G5 Chipset) இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் (Titan M2 Security Chip) இணைக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உடன் கிடைக்கிறது, 7 ஆண்டுகள் வரை ஆண்ட்ராய்டு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை (7 Years OS & Security Updates) கொடுக்கும்.
இதுவும் படியுங்கள்: வரலாற்றிலேயே மிகப்பெரிய மாற்றம்! Apple MacBook Ultra -வில் வரும் மாஸ் அம்சங்கள்!
Google Pixel 10 Camera Features
கூகுள் பிக்சல் 10 கேமரா அம்சங்கள்: போட்டோகிராபி பிரியர்களுக்காக, பின்புறத்தில் 48MP மெயின் கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 10.8MP டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பு (Triple Camera Setup) வழங்கப்பட்டுள்ளது. மெயின் கேமராவில் சாம்சங் ஜிஎன்8 சென்சார் (Samsung GN8 Sensor) மற்றும் ஓஐஎஸ் தொழில்நுட்பம் (OIS Technology) இடம்பெற்றுள்ளது. அல்ட்ரா வைடு கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்712 சென்சார் (Sony IMX712 Sensor) பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம், சாம்சங் 3ஜே1 சென்சாருடன் வரும் டெலிபோட்டோ கேமரா 20X சூப்பர் ரெஸ் ஜூம் (20X Super Res Zoom) மற்றும் 120X டிஜிட்டல் ஜூம் வசதியை (120X Digital Zoom) வழங்குகிறது. வீடியோ ரெக்கார்டிங் செய்ய 4கே வீடியோ ரெக்கார்டிங் (4K Video Recording) மற்றும் சினிமாட்டிக் பிளர் (Cinematic Blur) போன்ற மேம்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக 10.5MP முன்பக்க கேமரா (10.5MP Front Camera) வழங்கப்பட்டுள்ளது.
இதுவும் படியுங்கள்: 56 நாட்களுக்கு கவலையே இல்லை! JIO-வின் இந்த 2 பிளானில் எது பெஸ்ட் தெரியுமா?
Google Pixel 10 Battery Life
கூகுள் பிக்சல் 10 பேட்டரி லைஃப்: பேட்டரி அம்சங்களைப் பொறுத்தவரை, 4970mAh திறன் கொண்ட பேட்டரி (4970mAh Battery) மற்றும் 29W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (29W Fast Charging Support) வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அப்சிடியன் (Obsidian), பிராஸ்ட் (Frost), லெமன்கிராஸ் (Lemongrass) மற்றும் இண்டிகோ (Indigo) உள்ளிட்ட கவர்ச்சிகரமான நிறங்களில் கிடைக்கிறது.
Google Pixel 10 Price Drop on Flipkart
கூகுள் பிக்சல் 10 பிரைஸ் டிராப் ஆன் பிளிப்கார்ட்: இந்த பிரீமியம் ஸ்மார்ட்போனின் அசல் எம்ஆர்பி விலை (MRP Price) ரூ.79,999 ஆகும். இப்போது பிளிப்கார்ட் தளத்தில் 6 சதவீத நேரடி தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.74,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தும்போது ரூ.4,000 வங்கித் தள்ளுபடி (Rs.4000 Bank Card Discount) கூடுதலாகக் கிடைக்கிறது. இதன் மூலம் ரூ.79,999 மதிப்புள்ள போனை வெறும் ரூ.70,999 ஆரம்ப விலையிலேயே நீங்கள் வாங்கிவிட முடியும். சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் நீண்டகால அப்டேட் ஆதரவு விரும்பும் ஆண்ட்ராய்டு ரசிகர்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாகும்.