OPPO A7 Pro Max Specifications
ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்: தரமான டிஸ்பிளே மற்றும் நம்பகமான பவர்ஃபுல்லான செயல்திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 6.78 இன்ச் அளவிலான ஓஎல்இடி திரை (6.78-inch OLED Display) வழங்கப்பட்டுள்ளது. இது 1.5K ரெசொலூஷன் (1.5K Resolution) மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) வசதிகளைக் கொண்டுள்ளது. செயல்திறனுக்காக குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 சிப்செட் (Qualcomm Snapdragon 4 Gen 5 Chipset) பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 8GB RAM + 128GB Storage, 12GB RAM + 256GB Storage மற்றும் 12GB RAM + 512GB Storage என மூன்று வேரியண்ட்களில் வெளிவருகிறது. இத்துடன் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (3.5mm Headphone Jack), டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இயங்குகிறது.
இதுவும் படியுங்கள்: Google Pixel 10: போனுக்கு ரூ.4000 தள்ளுபடி! பிளிப்கார்ட் ஆஃபர்!
OPPO A7 Pro Max Camera Features
ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் கேமரா அம்சங்கள்: பின்புறத்தில் 50MP மெயின் கேமரா மற்றும் 2MP செகண்டரி கேமரா அடங்கிய டூயல் கேமரா அமைப்பு (50MP Dual Camera Setup) இடம்பெற்றுள்ளது. மேலும் செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக முன்பக்கத்தில் 50MP செல்ஃபி கேமரா (50MP Selfie Camera) கொடுக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள மேம்பட்ட கேமரா அம்சங்கள் மூலம் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும்.
இதுவும் படியுங்கள்: வரலாற்றிலேயே மிகப்பெரிய மாற்றம்! Apple MacBook Ultra -வில் வரும் மாஸ் அம்சங்கள்!
OPPO A7 Pro Max Battery Life
ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் பேட்டரி லைஃப்: இதில்தான் ஓப்போ நிறுவனம் மிகப்பெரிய சாதனையைச் செய்துள்ளது. இந்த போனில் 10000mAh திறன் கொண்ட பேட்டரி (10000mAh Battery) மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (80W Fast Charging Support) வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான டூயல் செல் இல்லாமல் சிலிகான்-கார்பன் அனோட் சிங்கிள்-செல் பேட்டரி (Silicon-carbon Anode Single-cell Battery) பயன்படுத்தப்பட்டிருப்பதால், 10000mAh பேட்டரி இருந்தும் போன் வெறும் 8.47 மிமீ தடிமன் (8.47mm Thickness) மற்றும் 226 கிராம் எடை (226g Weight) மட்டுமே கொண்டுள்ளது.
OPPO A7 Pro Max Launch Date
ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் ஆகஸ்ட் 4ஆம் தேதி அறிமுகம்: இந்த ஸ்மார்ட்போனின் சீன வெளியீட்டு தேதியை ஓப்போ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 4 ஆம் தேதி (August 4 Launch Date) இந்த மாஸ் போன் அறிமுகமாகிறது. பிளாக் (Black), ஆரஞ்ச் (Orange) மற்றும் கிராடியன்ட் ஒயிட் (Gradient White) ஆகிய கவர்ச்சிகரமான நிறங்களில் சந்தைக்கு வரவுள்ள இந்த போன், சார்ஜிங் கவலையே இல்லாத சிறந்த பேட்டரி போனை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு அல்டிமேட் தேர்வாக இருக்கும்.

