Moto G37 Power: பிளிப்கார்ட் சேலில் மாஸ் ஆஃபர்!

பிளிப்கார்ட் ப்ரீடம் சேலில் Moto G37 Power போனுக்கு ரூ.3,000 தள்ளுபடி! 7000mAh பேட்டரி, 50MP கேமரா, IP64 பாதுகாப்பு! ஆஃபர் விலை ரூ.13,999!

Moto G37 Power 5G Flipkart Freedom Sale Offer Price

Moto G37 Power: பிளிப்கார்ட் தளத்தில் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிளிப்கார்ட் ப்ரீடம் சேல் 2026 (Flipkart Freedom Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் மோட்டோ ஜி37 பவர் (Moto G37 Power) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த அம்சங்கள் மற்றும் பிரம்மாண்டமான பேட்டரி லைஃப் உடன் இந்தியச் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Moto G37 Power Specifications

மோட்டோ ஜி37 பவர் அம்சங்கள்: மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (MediaTek Dimensity 6400) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோ போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

6.66-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ ஜி37 பவர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1050 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. 

இதுவும் படியுங்கள்: Onida 55 inch 4K Fire TV: 29% தள்ளுபடி ஆஃபர்!

Moto G37 Power 5G 7000mAh Battery and MediaTek Dimensity 6400

Moto G37 Power Camera & Battery

50எம்பி பிரைமரி கேமரா + 2-இன்-1 ஆம்பியன்ட் மற்றும் ஃப்ளிக்கர் லைட் சென்சார் உடன் இந்த மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் (3.5mm Headphone Jack) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியும் இதில் உள்ளது.

இதுவும் படியுங்கள்: OPPO K14 5G: பிளிப்கார்ட் சேலில் அதிரடி ஆஃபர்!

தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது மோட்டோ ஜி37 பவர் போன். இதுதவிர MIL-STD 810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய போன். Hello UX சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது.

7000எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ ஜி37 பவர் போன் வெளியாகி உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் 5ஜி, வைஃபை 5, புளூடூத் 5.4, என்எப்சி, எப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

Moto G37 Power Price & Offer

மோட்டோ ஜி37 பவர் ஆஃபர் விவரங்கள்: 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற உள்ள ப்ரீடம் சேல் 2026 எனும் சிறப்பு விற்பனையில் இந்த மோட்டோ 5ஜி போனை ரூ.13,999 விலையில் வாங்க முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ரூ.3,000 வரை நேரடி தள்ளுபடி பெற முடியும்.


About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக