ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனங்கள் தங்களது திட்டங்களில் 5ஜி டேட்டாவை மட்டுமே வரம்பற்ற முறையில் வழங்குகின்றன. ஆனால் 4ஜி பயன்பாட்டிற்கு தினசரி குறிப்பிட்ட அளவு மட்டுமே டேட்டா ஒதுக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக, வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் எந்தவித டேட்டா கட்டுப்பாடும் இல்லாத பிரத்யேக திட்டத்தை களமிறக்கியுள்ளது.
குறிப்பாக வோடபோன் ஐடியா ரூ.449 திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) வசதியோடு, முழுமையான அன்லிமிடெட் 4ஜி டேட்டாவும் (Unlimited 4G Data) தடையின்றி கிடைக்கிறது. இதனுடன் 19 பிரபல ஓடிடி தளங்களின் சந்தாக்களும் இலவசமாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ரீசார்ஜ் பேக்கில் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
Vodafone Idea Rs 449 Plan Details
வோடபோன் ஐடியா ரூ.449 திட்ட விவரங்கள்: இந்த ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு மொத்தம் 28 நாட்கள் வேலிடிட்டி (28 Days Validity) வழங்கப்படுகிறது. இந்த வேலிடிட்டி காலம் முழுவதும் விஐ 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் இடங்களில் அதிவேக 5ஜி சேவையை வரம்பின்றி அனுபவிக்க முடியும்.
அதேபோல் விஐ நெட்வொர்க் உள்ள அனைத்து பகுதிகளிலும் தினசரி அளவு வரம்பு (No Daily FUP Limit) ஏதுமின்றி 4ஜி இணைய சேவையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற லோக்கல் (Unlimited Local Calls), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) வசதி உண்டு.
கூடுதலாக நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களும் (100 SMS per day) வழங்கப்படுகிறது. இதில் முழு நாளும் எல்லையற்ற இணைய வசதி கிடைப்பதால் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) அல்லது நைட் டேட்டா போன்ற கூடுதல் பேக்குகளின் அவசியமே இருக்காது.
இதையும் படியுங்கள்: Realme C100i Launch Date ஆகஸ்ட் 27-ல் ரிலீஸ்!
Vi Rs 449 Plan OTT Benefits
வோடபோன் ஐடியா ரூ.449 ஓடிடி சலுகைகள்: என்டர்டெயின்மென்ட் பிரியர்களுக்காக இந்த திட்டத்தில் விஐ மூவிஸ் & டிவி சூப்பர் ஆப் (Vi Movies & TV Super App) அணுகல் 28 நாட்களுக்கு முழுமையாக வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக ஒரே செயலியில் 19 முன்னணி ஓடிடி இயங்குதளங்களை (19 OTT Platforms) ஸ்மார்ட்போன் மற்றும் டிவிகளில் கண்டுகளிக்கலாம்.
இதில் சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஃபேன்கோட் (FanCode), மனோரமா மேக்ஸ் (ManoramaMAX), கிளிக் (KLIKK) மற்றும் சௌபால் (Chaupal) உள்ளிட்ட பல முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்கள் அடங்கும்.
இதையும் படியுங்கள்: ரூ.20,000 பட்ஜெட்டில் 144Hz டிஸ்பிளே.. மார்க்கெட்டை மிரட்ட வரும் புதிய இன்பினிக்ஸ் போன்!
Vodafone Idea Rs 399 Plan Details
வோடபோன் ஐடியா ரூ.399 திட்ட விவரங்கள்: இதேபோன்ற முழுமையான டேட்டா சலுகையைக் குறைந்த கட்டணத்தில் பெற விரும்புவோர் ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தைத் தேர்வு செய்யலாம். இதற்கும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
இதிலும் வரம்பற்ற 5ஜி மற்றும் 4ஜி டேட்டா வசதியுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
இதில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா 28 நாட்களுக்கு கிடைக்கிறது. எனினும் ரூ.449 திட்டத்தில் கிடைக்கும் விஐ மூவிஸ் & டிவி 19 ஓடிடி தொகுப்பு இதில் இடம்பெறாது. அதிக ஓடிடி ஆப்கள் தேவையில்லை என்பவர்களுக்கு இந்த குறைந்த விலை திட்டம் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

