Vi Rs 696 Plan: அமேசான் பிரைம் & 2GB டேட்டா!

Vi Rs 696 Plaவோடபோன் ஐடியாவின் ரூ.696 ப்ரீபெய்ட் திட்டம்! 56 நாட்கள் வேலிடிட்டி, அமேசான் பிரைம் லைட், நாளொன்றுக்கு 2GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்

Vodafone Idea Rs 696 Prepaid Recharge Plan Details

Vi Rs 696 Plan:
வோடபோன் ஐடியா (Vodafone Idea) சிம் கார்டு வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு ப்ரீபெய்ட் திட்டத்தில் அமேசான் பிரைம் (Amazon Prime) சந்தா வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் திட்டம் மட்டுமே சரியான தேர்வாக இருக்கும். இதைவிட மலிவான விலைக்கு அமேசான் பிரைம் சந்தாவைப் பெற்று கொள்ள முடியாது.

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார் போன்ற ப்ரீமியம் ஓடிடி ஆப்களை தனியாக மட்டுமே பெற முடிந்தது. ஆனால் டெலிகாம் கஸ்டமர்கள் அதிகமாக ஓடிடி ஆப்களைப் பயன்படுத்த தொடங்கிய பிறகு, ரீசார்ஜ் திட்டங்களிலேயே ஓடிடி சந்தாவும் வழங்கப்பட்டு வருகிறது.

Vodafone Idea Rs 696 Plan Details

வோடபோன் ஐடியா ரூ.696 திட்ட விவரங்கள்: இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 56 நாட்கள் வேலிடிட்டி (56 Days Validity) கிடைக்கிறது. இந்த நாட்கள் வரையில் மட்டுமே அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தாவைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். 720p ரெசொலூஷனில் வீடியோக்களைப் பார்த்துக் கொள்ள முடியும்.

இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் கிடைக்கிறது. மேலும் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), அன்லிமிடெட் அரை நாள் டேட்டா (Unlimited Half Day Data) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகைகளும் கிடைக்கிறது. 

இதுவும் படியுங்கள்: Redmi Note 17 Pro 5G: 8340mAh பேட்டரி லீக் அம்சங்கள்!

Vi Rs 696 Plan Amazon Prime Lite Subscription and Daily Data Benefits

Data & Calling Benefits

டேட்டா மற்றும் அழைப்பு சலுகைகள்: ஓடிடி சந்தா போக 56 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படும். இது வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். 4ஜி கஸ்டமர்களாக இருந்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை (2GB Daily Data) பயன்படுத்திக் கொள்ளலாம். பிறகு 64 கேபிபிஎஸ் (64 Kbps Speed) வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

அதேபோல வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் (100 SMS per Day) கிடைக்கும்.

இதுவும் படியுங்கள்: UPIயில் 'புதிய' விதிகள் - செப்டம்பர் 4 முதல் 'அறிமுகம்'

Additional Data Benefits

கூடுதல் டேட்டா சலுகைகள்: கூடுதல் டேட்டா சலுகைகளும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏராளமாக கிடைக்கின்றன. நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் இலவச டேட்டா (Hero Unlimited Benefits) கிடைக்கும். இந்த டேட்டாவுக்கும், தினசரி டேட்டாவுக்கும் தொடர்பில்லை. நள்ளிரவு 12 மணி முதல் 4ஜி கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். 5ஜி கஸ்டமர்கள் வழக்கம்போல 5ஜி டேட்டாவை இலவசமாக பெற்று கொள்ளலாம்.

இதுபோக டேட்டா டிலைட்ஸ் சலுகை கிடைக்கிறது. அதாவது எந்த டேட்டா சலுகையும் இல்லாமல் வேலிடிட்டி மட்டும் இருக்கும்போது, 2 ஜிபி டேட்டாவை எமர்ஜென்சி டேட்டாவாக (2GB Emergency Data) கிளைம் செய்து பெற்று கொள்ளலாம். இவ்வளவு சலுகைகளையும் இந்த வோடபோன் ஐடியா ரூ.696 திட்டம் கொடுத்து இருக்கிறது.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக