Redmi Note 17 Pro 5G: 8340mAh பேட்டரி லீக் அம்சங்கள்!

ரெட்மி நோட் 17 புரோ 5ஜி போனின் லீக் அம்சங்கள்! 8340mAh பேட்டரி, Snapdragon 6s Gen 4 சிப்செட், IP69K பாதுகாப்பு மற்றும் 1.5K AMOLED டிஸ்பிளே!

Redmi Note 17 Pro 5G Full Specifications and Design Leak

ரெட்மி பிரியர்களுக்கு ஒரு செம்ம சர்ப்ரைஸ் செய்தி வெளியாகியுள்ளது. ரெட்மி நோட் 17 புரோ 5ஜி (Redmi Note 17 Pro 5G) ஸ்மார்ட்போனின் (Smartphone) அதிகாரப்பூர்வ சிறப்பம்சங்கள் அடங்கிய போஸ்டர் லீக் ஆகியுள்ளது.

Redmi மிட்-ரேன்ஜ் பிரிவில் இதுவரை பார்க்காத பிரம்மாண்டமான பேட்டரி மற்றும் ராணுவத் தரத்திலான பாதுகாப்புடன் இந்த போன் தயாராகியுள்ளது. சியோமி ரசிகர்களிடம் இந்த லீக் செய்தி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Redmi Note 17 Pro 5G Specifications

ரெட்மி நோட் 17 புரோ 5ஜி அம்சங்கள்: புதிய ரெட்மி நோட் 17 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக் (Black), ஸ்கை ப்ளூ (Sky Blue), சாடின் ஆரஞ்ச் (Satin Orange) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய கலர்களில் வெளியாகிறது. இதன் அளவு 163.45mm x 78.27mm x 8.46mm மற்றும் எடை 222 கிராம் ஆகும்.

இதில் 6.83 இன்ச் 1.5K கிரிஸ்டல்ரெஸ் அமோலெட் டிஸ்ப்ளே (6.83-inch 1.5K CrystalRes AMOLED Display) உள்ளது. மேலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (Up to 120Hz Refresh Rate), 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (3500 nits Peak Brightness) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஸ்நாப்டிராகன் 6எஸ் ஜென் 4 மொபைல் பிளாட்ஃபார்ம் சிப்செட் (Snapdragon 6s Gen 4 Mobile Platform Chipset) பொருத்தப்பட்டுள்ளது. சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3), கூகுள் ஜெமினி (Google Gemini) மற்றும் சர்க்கிள் டு சர்ச் (Circle to Search) போன்ற AI அம்சங்களும் இதில் உள்ளன.

கேமராவைப் பொறுத்தவரை 50 எம்பி மெயின் கேமரா (50MP Main Camera with OIS) மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (8MP Ultra-wide Camera) உள்ளது. செல்ஃபிகளுக்காக 16 எம்பி ஃப்ரண்ட் கேமரா (16MP Front Camera) கொடுக்கப்பட்டுள்ளது. 

இதுவும் படியுங்கள்: UPIயில் 'புதிய' விதிகள் - செப்டம்பர் 4 முதல் 'அறிமுகம்'

Redmi Note 17 Pro 5G Full Specifications and Design Leak

Redmi Note 17 Pro 5G Battery & Features

ரெட்மி நோட் 17 புரோ 5ஜி பேட்டரி மற்றும் சிறப்பம்சங்கள்: இதன் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டே இதன் பேட்டரி தான். இதில் 8340mAh ராட்சத சிலிக்கான் கார்பன் பேட்டரி (8340mAh Silicon-carbon Battery) வழங்கப்பட்டுள்ளது.

இதனை வேகமாக சார்ஜ் செய்ய 67W ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் (67W HyperCharge Fast Charging) வசதியும் உண்டு. இதன் மூலம் 2 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாகப் பயன்படுத்த முடியும்.

மேலும் IP66, IP68, IP69 மற்றும் IP69K டஸ்ட் அண்ட் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (IP66, IP68, IP69 and IP69K Dust and Water Resistance) பாதுகாப்பு உள்ளது. இது 2 மீட்டர் ஆழத்து நீரில் 72 மணி நேரம் தாங்கும் திறன் கொண்டது.

இவற்றுடன் இன்-ஸ்கிரீன் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-screen Fingerprint Sensor) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos Audio) ஒலி அமைப்பும் இதில் இடம்பெற்றுள்ளது.

Redmi Note 17 Pro 5G Storage & Variants

ரெட்மி நோட் 17 புரோ 5ஜி ஸ்டோரேஜ் விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போன் 6GB, 8GB மற்றும் 12GB ரேம் (RAM) விருப்பங்களிலும், 128GB (UFS 2.2 Storage), 256GB மற்றும் 512GB (UFS 3.1 Storage) மெமரி தேர்வுகளிலும் வெளியாகிறது.

இதில் Dual SIM (nano SIM + nano SIM or nano SIM + eSIM) ஆதரவும் உள்ளது. LPDDR4X ரேம் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி மற்றும் இந்திய விலை விவரங்கள் விரைவில் சியோமி நிறுவனத்தால் அறிவிக்கப்படும். 8340mAh பேட்டரி மற்றும் IP69K ரேட்டிங் இருப்பதால் இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக