ரூ.26,000 பட்ஜெட்ல Samsung Galaxy F70 Pro 5G: ஆகஸ்ட் 3 ரிலீஸ்!

Samsung Galaxy F70 Pro 5G: ஆகஸ்ட் 3-இல் அறிமுகம். 6000mAh பேட்டரி, Snapdragon 6 Gen 3 சிப்செட், 50MP கேமரா மற்றும் விலை விவரங்கள் இதோ!

Samsung Galaxy F70 Pro 5G Smartphone Front and Back View

சாம்சங் (Samsung) பிரியர்களுக்கு அடுத்த வாரம் படு குஷியாக இருக்கப் போகிறது. சாம்சங் கேலக்ஸி எஃப்70 புரோ 5ஜி (Samsung Galaxy F70 Pro 5G) ஸ்மார்ட்போனின் (Smartphone) வெளியீட்டு தேதி மட்டுமில்லாமல், விலை விவரங்களும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுவிட்டன. முக்கிய அம்சங்களும் தெரிய வந்துள்ளன.

Samsung Galaxy F70 Pro 5G Specifications

சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி அம்சங்கள்: சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போனில் கிரீன் மற்றும் பிளாக் கலர் வேரியண்ட்கள் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படியான டிசைன் (Design) மற்றும் கலரில் இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்70 புரோ 5ஜி கிடைக்கிறது. 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளேவை (6.7-inch Super AMOLED Display) கொடுத்துள்ளது.

மேலும், ஃபுல்எச்டிபிளஸ் ரெஸொல்யூஷன் (Full HD+ Resolution), 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் IP54 ரேட்டிங் (IP54 Rating) கொண்ட டஸ்ட் அண்ட் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust and Splash Resistance) கிடைக்கிறது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட்டை (Octa Core Qualcomm Snapdragon 6 Gen 3 Chipset) இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்70 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது.

இதுவும் படியுங்கள்: UPIயில் 'புதிய' விதிகள் - செப்டம்பர் 4 முதல் 'அறிமுகம்'

வழக்கமான ஒன் யுஐ போர்டு ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட உள்ளது. அதேபோல 6 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates) மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கிடைக்கின்றன. 50 எம்பி மெயின் கேமரா (50MP Main Camera) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) தொழில்நுட்பத்தை கொடுக்க இருக்கிறது.

இதுபோக, அல்ட்ரா வைடு லென்ஸ் (Ultra Wide Lens) மற்றும் மேக்ரோ சென்சார் (Macro Sensor) கொடுக்கப்பட உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (45W Fast Charging) மற்றும் 6000mAh ராட்சத பேட்டரியை (6000mAh Massive Battery) இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்70 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. இந்த அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுவிட்டன.

Samsung Galaxy F70 Pro 5G Launch Date?

சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி அறிமுக தேதி: வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று சாம்சங் கேலக்ஸி எஃப்70 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய மார்க்கெட்டில் (Indian Market) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இப்போது, வெளியீட்டு தேதியுடன் ரேம், ஸ்டோரேஜ் மட்டுமில்லாமல், சிப்செட், பேட்டரி உள்ளிட்ட அம்சங்களும் உறுதியாகி இருக்கின்றன. 

இதுவும் படியுங்கள்: ஜியோவை முந்திய ஏர்டெல்! டிராய் (TRAI) ஜூன் 2026 அதிரடி ரிப்போர்ட்! 

Samsung Galaxy F70 Pro 5G 6000mAh Battery and Fast Charging Feature

Samsung Galaxy F70 Pro 5G Price?

சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி விலை : கூடவே, விலை விவரங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆகவே, இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்70 புரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் (6GB RAM + 128GB Storage Variant) விலை ரூ.25,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,999 ஆகவும் இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,999 ஆகவும் இருக்கிறது.

இது ஒரிஜினல் விலையாக (Original Price) இருக்கிறது. அறிமுக சலுகை (Launch Offer) மற்றும் பேங்க் ஆபர்களுடன் (Bank Offers) மேலும் கம்மியான விலைக்கு கிடைக்கும் என்பதையும் சாம்சங் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆகவே, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999 ஆக இருக்க வாய்ப்புள்ளது. இந்த விலை கிட்டத்தட்ட சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி மாடலை போலவே இருக்கிறது. ஆகவே, ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக