SBI வாடிக்கையாளர்களே உஷார்! பிப்.15 முதல் அமலுக்கு வரும் 3 முக்கிய மாற்றங்கள்!: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான State Bank of India (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு சில அதிர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 15, 2026 முதல் பணம் அனுப்புவது, கிரெடிட் கார்டு மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பாகப் பல மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.
SBI வாடிக்கையாளர்களே உஷார்! பிப்.15 முதல் அமலுக்கு வரும் 3 முக்கிய மாற்றங்கள்!
நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளராக இருந்தால், உங்கள் பாக்கெட்டைப் பாதிக்கக்கூடிய இந்த 3 முக்கிய மாற்றங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.
பணம் அனுப்ப இனி கட்டணம்! (IMPS Charges)
இதுவரை எஸ்பிஐ-யின் YONO App, இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் வழியாக செய்யப்படும் IMPS (Immediate Payment Service) பரிவர்த்தனைகள் இலவசமாக இருந்தன. ஆனால், இனி அதற்குத் தனிக் கட்டணம் உண்டு.!
- புதிய விதி: பிப்ரவரி 15 முதல், ₹25,000-க்கு மேல் IMPS மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கப்படும்.
- கட்டண விபரம்:
- ₹25,000 - ₹1 லட்சம்: ₹2 + GST.
- ₹1 லட்சம் - ₹2 லட்சம்: ₹6 + GST.
- ₹2 லட்சம் - ₹5 லட்சம்: ₹10 + GST.
- தீர்வு: கட்டணத்தைத் தவிர்க்க, நீங்கள் NEFT அல்லது RTGS முறையைப் பயன்படுத்தலாம் என்று எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.
கிரெடிட் கார்டு ரிவார்ட்ஸ் கட்! (Credit Card Rules)
எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கும் ஒரு கெட்ட செய்தி.
- ஆன்லைன் கேமிங் (Online Gaming) மற்றும் அரசு தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு (Govt Transactions) இனி ரிவார்ட் பாயிண்ட்கள் (Reward Points) கிடைக்காது அல்லது குறைக்கப்படும்.
- விமான நிலையங்களில் உள்ள லவுஞ்ச் வசதியை (Airport Lounge Access) பயன்படுத்துவதற்கான தகுதி வரம்புகளும் (Eligibility) அதிகரிக்கப்பட்டுள்ளன.
இன்ஆக்டிவ் கணக்குகள் குளோஸ்! (Account Closure)
- நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகளை (Inactive Accounts) கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
- ரிசர்வ் வங்கியின் (RBI) உத்தரவுப்படி, செயல்படாத கணக்குகளில் உள்ள பணம் "கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு" மாற்றப்படும்.
- எனவே, நீண்ட நாட்களாக நீங்கள் பயன்படுத்தாத எஸ்பிஐ அக்கவுண்ட் இருந்தால், அது பிப்ரவரி 15 முதல் படிப்படியாக மூடப்படும் அபாயம் உள்ளது. உடனே ஒரு சிறிய பரிவர்த்தனை செய்து அதை ஆக்டிவ் செய்வது நல்லது.
இதையும் படியுங்கள்: Oppo Find X9s: 200MP கேமராவுடன் வரும் "பாக்கெட் ராக்கெட்"
★ Tech Voice Tamil Verdict
டிஜிட்டல் இந்தியா என்று சொல்லிவிட்டு, இப்போது IMPS பரிவர்த்தனைக்குக் கட்டணம் விதிப்பது சாதாரண மக்களைப் பாதிக்கும். அவசரமாகப் பணம் அனுப்பும்போது ₹10 + GST என்பது கூடுதல் சுமைதான்.
கூகுள் பே (UPI) பயன்படுத்தும் வரை பிரச்சனை இல்லை. ஆனால் பெரிய தொகை அனுப்பும்போது இனி கவனமாக இருங்கள்! NEFT பயன்படுத்துவது புத்திசாலித்தனம். ✅
Source / நன்றி: PuthiyathalaimuraiTV ( YouTube Channel)
