AC வாங்குவது எப்படி?:
Understanding room size and why it matters.
அறையின் அளவைப் புரிந்துகொள்வது (Room size guide for AC): ஏசி வாங்கும் முன் உங்கள் அறையின் அளவு என்ன என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். 120 சதுர அடிக்கு குறைவான சிறிய அறைகளுக்கு குறைந்த திறன் கொண்ட ஏசி போதுமானது. நடுத்தர மற்றும் பெரிய அறைகளுக்கு சக்திவாய்ந்த ஏசிகள் தேவைப்படும். அறையின் அளவு மட்டுமின்றி, நேரடியாக சூரிய ஒளி படும் அறையா, வீட்டின் மேல் மாடியா போன்ற விஷயங்களும் ஏசியின் கூலிங் திறனை பெரிய அளவில் பாதிக்கும். அதேபோல, அதிக உயரம் கொண்ட சீலிங் இருந்தால் அதிக காற்று தேவைப்படும்.
Understanding AC tonnage and its impact on cooling performance.
ஏசி டன் அளவு மற்றும் கூலிங் பெர்ஃபார்மன்ஸ் (AC tonnage calculator): ஏசியில் உள்ள 'டன்' என்பது அதன் எடையைக் குறிக்காது, அதன் கூலிங் திறனைக் குறிக்கும். சிறிய அறையில் அதிக டன் கொண்ட ஏசியைப் போட்டால் அது சீக்கிரம் குளிர்ந்துவிடும், ஆனால் அறையில் உள்ள ஈரப்பதத்தை சரியாகக் கையாளாது. அதேபோல பெரிய அறையில் குறைந்த டன் ஏசியைப் போட்டால் அது சரியான கூலிங்கை கொடுக்காமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். இது கரண்ட் பில்லை எகிற வைக்கும். எனவே சரியான அளவிலான டன்னை தேர்வு செய்வது மிகவும் முக்கியம். AC வாங்குவது எப்படி?
மேலும் படிக்க: 👉 லேப்டாப் ரேஞ்சுக்கு 7000mAh ராட்சத பேட்டரியுடன் வெளியாகும் புதிய Xiaomi 17T சீரிஸ்!
Types of air conditioners and how they behave.
ஏசி வகைகளும் அவற்றின் செயல்பாடும் (Types of air conditioners): வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஸ்பிளிட் ஏசிகள் (Split ACs) தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதன் கம்ப்ரஸர் வெளியே இருப்பதால் சத்தம் இல்லாமல், மிகச் சிறப்பான மற்றும் நிலையான கூலிங் அனுபவத்தைக் கொடுக்கும். இதுதவிர போர்ட்டபிள் ஏசிகளும் (Portable ACs) உள்ளன. வாடகை வீடுகளில் இருப்பவர்களுக்கு நிரந்தர இன்ஸ்டாலேஷன் தேவைப்படாத இந்த போர்ட்டபிள் ஏசிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Energy efficiency and how it affects long-term AC usage.
மின்சார சேமிப்பு மற்றும் ரேட்டிங் (Energy efficiency ratings): நாம் வாங்கும் ஏசி எவ்வளவு கரண்ட் எடுக்கும் என்பதை அதன் ஸ்டார் ரேட்டிங் (Star Rating) மற்றும் எனர்ஜி எஃபிசியன்சி ரேஷியோ (EER) ஆகியவற்றைக் கொண்டு அறியலாம். அதிக ஸ்டார்கள் மற்றும் அதிக EER கொண்ட ஏசிகள் கரண்ட் பில்லைக் கணிசமாகக் குறைக்கும். நீண்ட நேரம் ஏசி பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக எனர்ஜி ஸ்டார் சர்டிபிகேட் உள்ள மாடல்களை வாங்குவது நல்லது.
Features that affect daily comfort while selecting the correct air conditioners.
கூடுதல் சிறப்பம்சங்கள் (Must-know AC features): அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, ஆட்டோ-கிளீன் (Auto-clean) வசதி உள்ள ஏசியை வாங்கினால் காற்றில் உள்ள ஈரப்பதம் சேராமல் தடுப்பதோடு, மெயின்டனன்ஸ் செலவும் குறையும். காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தைக் குறைக்க டிஹியூமிடிஃபையர் (Dehumidifier) மோட் உள்ளதா என்று பார்க்க வேண்டும். மேலும், அட்ஜஸ்டபிள் ஏர்ஃப்ளோ (Adjustable airflow) மற்றும் எளிதாகப் சுத்தம் செய்யக்கூடிய ஃபில்டர்கள் (Easy filter cleaning) உள்ள மாடல்களாகப் பார்த்து வாங்குவது உங்கள் தினசரி பயன்பாட்டை அட்டகாசமாக மாற்றும்.