ஸ்மார்ட்போன் சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஷாவ்மி (Xiaomi) நிறுவனம் தனது அடுத்த மாபெரும் படைப்பான 'ஷாவ்மி 17டி' (Xiaomi 17T) மற்றும் 'ஷாவ்மி 17டி ப்ரோ' (Xiaomi 17T Pro) ஆகிய போன்களை வெளியிடத் தயாராகி வருகிறது. இணையத்தில் கசிந்துள்ள தகவல்களின்படி, இந்த புதிய போன்கள் எப்போது வெளியாகும் மற்றும் இதில் என்னென்ன மிரட்டலான வசதிகள் இருக்கும் என்பதை இப்போது விலாவாரியாகப் பார்ப்போம்.
Xiaomi 17T, Xiaomi 17T Pro Display and Design
டிஸ்ப்ளே மற்றும் வடிவமைப்பு (Xiaomi 17T display and design): ஷாவ்மி 17டி மாடலில் 6.59 இன்ச் அளவிலான 1.5K AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்படலாம். அதேசமயம் ப்ரோ மாடலில் சற்றே பெரிய 6.83 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் மிக ஸ்மூத்தான 144Hz ரெஃப்ரெஷ் ரேட் இருக்கும் எனத் தெரிகிறது. இவை இரண்டும் மெல்லிய வடிவமைப்புடன் கருப்பு, நீலம் மற்றும் ஊதா ஆகிய நிறங்களில் வெளியாகும்.
Xiaomi 17T, Xiaomi 17T Pro Camera Features
கேமரா சிறப்பம்சங்கள் (Xiaomi 17T camera setup): இரண்டு போன்களிலும் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறும். 17டி மாடலில் 50MP மெயின் கேமரா இருக்கும், ப்ரோ மாடலில் மேம்படுத்தப்பட்ட 50MP மெயின் சென்சார் இடம்பெறும். இத்துடன் 5X ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ரா வைடு கேமரா ஆகியவை இடம்பெறும். செல்ஃபிக்காக 32MP பிரண்ட் கேமரா கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: 👉 சாம்சங்கிற்கு ஆப்படிக்க வரும் Vivo X Fold 6.. இணையத்தில் கசிந்த மாஸ் சிறப்பம்சங்கள்!
Xiaomi 17T, Xiaomi 17T Pro Processor and Performance
ப்ராசஸர் மற்றும் வேகம் (Xiaomi 17T processor): பெர்ஃபார்மன்ஸை பொறுத்தவரை 17டி ப்ரோ மாடலானது ஃபிளாக்ஷிப் தரத்திலான MediaTek Dimensity 9500 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். சாதாரண 17டி மாடலில் MediaTek Dimensity 8500 Ultra ப்ராசஸர் இருக்கும். இரண்டும் 12GB RAM மற்றும் 512GB வரையிலான அதிவேக UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் வரும். இது ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட புதிய HyperOS 3 இயங்குதளத்தில் செயல்படும்.
Xiaomi 17T, Xiaomi 17T Pro Battery and Charging
பேட்டரி மற்றும் சார்ஜிங் வேகம் (Xiaomi 17T battery specs): 17டி மாடலில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,500mAh பேட்டரி பேக் செய்யப்படலாம். அதேசமயம் 17டி ப்ரோ மாடலில் மிகப்பெரிய 7,000mAh ராட்சத பேட்டரி மற்றும் மின்னல் வேக 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் இடம்பெறும் என இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.
Connectivity and Additional Features
கூடுதல் சிறப்பம்சங்கள் (Connectivity features): 17டி மாடல் Wi-Fi 6E ஆதரவையும், ப்ரோ மாடல் Wi-Fi 7 ஆதரவையும் கொண்டிருக்கும். மேலும் இரண்டு மாடல்களிலும் NFC வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது.
Xiaomi 17T, Xiaomi 17T Pro Price
உத்தேச விலை விபரங்கள் (Xiaomi 17T price): கசிந்த தகவல்களின்படி, 12GB RAM + 256GB மெமரி கொண்ட 17டி மாடலின் விலை தோராயமாக ரூ.83,000 (EUR 749) என்ற அளவில் தொடங்கலாம். 12GB RAM + 512GB மெமரி கொண்ட 17டி ப்ரோ மாடலின் விலை தோராயமாக ரூ.1,11,000 (EUR 999) என்ற அளவில் இருக்கும்.
Xiaomi 17T Series Launch: What to Expect
எப்போது வெளியாகும்? (Xiaomi 17T launch timeline): இந்த போன்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை ஷாவ்மி இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், மே மாதத்தின் பிற்பகுதியில் அல்லது ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் இவை சர்வதேச சந்தையில் அறிமுகமாகலாம் எனப் பரவலாகப் பேசப்படுகிறது.
