இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பல நாட்களாக மிகப்பெரிய பேசுபொருளாக இருந்து வரும் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இறுதியாகக் களமிறங்கவுள்ளன. வருகிற மே 7 ஆம் தேதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகவுள்ள ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 (OnePlus Nord CE 6) மற்றும் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் (OnePlus Nord CE 6 Lite) ஆகிய இரண்டு மாடல்களின் விற்பனை தேதிகள் மற்றும் முழுமையான சிறப்பம்சங்களை நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாங்குவதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அத்தனை விபரங்களும் இதோ.
OnePlus Nord CE 6 Series Sale Dates
விற்பனை தேதிகள் மற்றும் கிடைக்கும் இடங்கள்: (Sale date and availability) இந்த இரண்டு அட்டகாசமான மாடல்களும் மே 7 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகின்றன. இதில் ஸ்டாண்டர்ட் மாடலான ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனின் விற்பனை மே 8 ஆம் தேதி மதியம் 12 மணிக்குத் தொடங்குகிறது. அதே சமயம், பட்ஜெட் வாசிகளின் ஃபேவரட்டான ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் மாடலானது மே 12 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போன்களை அமேசான் இந்தியா (Amazon India), ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ரீடைல் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.
OnePlus Nord CE 6 Display and Processor
டிஸ்பிளே மற்றும் பெர்ஃபார்மன்ஸ்: (AMOLED display and Processor) பிரீமியம் மாடலான ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனில் 1.5K ரெசொலூஷன் கொண்ட அட்டகாசமான அமோலெட் டிஸ்பிளே (AMOLED display with 1.5K resolution) கொடுக்கப்பட்டுள்ளது. கேமிங் மற்றும் வீடியோக்களுக்கு ஸ்மூத்தான அனுபவத்தைக் கொடுக்க 144Hz ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) வழங்கப்பட்டுள்ளது. இதன் வேகத்திற்கு முக்கியக் காரணம், இதில் பொருத்தப்பட்டுள்ள பவர்ஃபுல்லான ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Snapdragon 7s Gen 4 chipset) ப்ராசஸர் தான்.
Massive 8000mAh Battery and Build Quality
முரட்டு பேட்டரி மற்றும் பாதுகாப்பு: (Massive 8000mAh battery and Build) பேட்டரி செக்மெண்டில் இந்த போன் மற்ற நிறுவனங்களை வெச்சி செய்யவுள்ளது. இதில் பிரம்மாண்டமான 8,000mAh பேட்டரி (8,000mAh cell) இடம்பெற்றுள்ளது. மற்ற சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய 27W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதைவிட மிக முக்கியமானது இதன் பாதுகாப்பு அம்சங்கள் தான். இந்த போன் IP66, IP68, IP69 மற்றும் IP69K ஆகிய அனைத்து விதமான டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust and water resistance) ரேட்டிங்குகளையும் பெற்றுள்ளது. மேலும் இது மிலிட்டரி கிரேடு (MIL-STD-810H) சான்றிதழும் பெற்றுள்ளது.
Camera and Audio Features
கேமரா மற்றும் ஆடியோ சிறப்பம்சங்கள்: (Camera and Audio features) கேமராவைப் பொறுத்தவரை, இதன் பின்பக்கத்தில் 50 எம்பி பிரைமரி கேமரா (50-megapixel primary rear camera) செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ காலிங்கிற்காக முன்பக்கத்தில் 32 எம்பி அட்டகாசமான சென்சார் (32-megapixel selfie shooter) உள்ளது. மேலும் மல்டிமீடியா பிரியர்களுக்காக தரமான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual stereo speakers) இதில் இன்பில்ட்டாகவே வருகின்றன.
OnePlus Nord CE 6 Lite Specifications
லைட் மாடலின் சிறப்பம்சங்கள்: (Nord CE 6 Lite specifications) குறைந்த விலையில் வரும் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் மாடலானது மீடியாடெக் டைமென்சிட்டி 7400 அப்பெக்ஸ் (MediaTek Dimensity 7400 Apex chipset) ப்ராசஸரில் இயங்குகிறது. இதில் 7000mAh முரட்டு பேட்டரி (7,000mAh battery) மற்றும் 50 எம்பி மெயின் கேமரா இடம்பெற்றுள்ளது.
Colours and Expected Price Range
நிறங்கள் மற்றும் விலை விபரம்: (Colours and Price range) ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 மாடலானது பிரெஷ் ப்ளூ (Fresh Blue), லூனார் பெர்ல் மற்றும் பிட்ச் பிளாக் ஆகிய 3 நிறங்களில் வெளியாகும். லைட் மாடலானது விவிட் மின்ட் (Vivid Mint) மற்றும் ஹைப்பர் பிளாக் நிறங்களில் கிடைக்கும். ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் மாடலின் விலை தோராயமாக ரூ.20,000 முதல் ரூ.25,000 (Priced between Rs. 20,000 and Rs. 25,000) என்ற பட்ஜெட் செக்மெண்டில் இருக்கும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.