RBI New Rules 2026 பேங்க் Savings Account வச்சிருக்கீங்களா? RBI கொண்டுவந்த 6 புதிய அதிரடி விதிகள்!: ஏப்ரல் 2026 முதல் வங்கி விதிமுறைகளில் ஆர்பிஐ (RBI) மற்றும் நிதி அமைச்சகம் பல பிரம்மாண்டமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. யூபிஐ, ஏடிஎம் மற்றும் இன்கம் டாக்ஸ் என பல விஷயங்களில் புதிய விதிமுறைகள் (New banking rules) அதிரடியாக அமலுக்கு வந்துள்ளன. எந்த பேங்கில் அக்கவுண்ட் இருந்தாலும், உங்களுக்குத் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 6 முக்கியமான புதிய ஆர்பிஐ ரூல்ஸ் பற்றி இப்போது விரிவாகப் பார்க்கலாம்.
பேங்க் Savings Account வச்சிருக்கீங்களா? RBI கொண்டுவந்த 6 புதிய அதிரடி விதிகள்!
HDFC ATM Withdrawal Limit ஏடிஎம் பணம் எடுப்பது: முன்பு ஏடிஎம் கார்டு மூலமாக எடுப்பதற்கு மட்டுமே லிமிட் இருந்தது, யூபிஐ கியூஆர் கோடு (UPI QR code) ஸ்கேன் செய்து எடுப்பது ஃப்ரீயாக இருந்தது. ஆனால் இப்போது HDFC வங்கி, கார்டு அல்லது கியூஆர் கோடு என எந்த முறையில் எடுத்தாலும் மாதத்திற்கு 5 முறை (மெட்ரோ நகரங்களில் 3 முறை) மட்டுமே இலவசம் என அறிவித்துள்ளது. அதற்கு மேல் எடுத்தால் ₹23 + GST கட்டணமாகப் பிடிக்கப்படும்.
PAN Card High Value Transaction
பான் கார்டு மற்றும் பணப் பரிவர்த்தனை: வருமான வரித்துறை உங்கள் வரவு செலவுகளைத் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. ஒரு வருடத்தில் சேமிப்பு கணக்கில் (Savings account) ₹10 லட்சத்திற்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்தாலோ, அல்லது கிரெடிட் கார்டு பில்லை ₹1 லட்சத்திற்கு மேல் பணமாகக் கட்டினாலோ பேங்க் நேரடியாக ஐடி டிபார்ட்மென்ட்டுக்கு ரிப்போர்ட் செய்துவிடுவார்கள்.
💡 இதையும் படிங்க: 👉 போன் சூடாகுதா? கூலிங் ஃபேன் உடன் வந்தாச்சு Redmi K90 Max!
Zero Balance Account Benefits
ஜீரோ பேலன்ஸ் கணக்கு: மினிமம் பேலன்ஸ் வைக்கத் தேவையில்லாத பேசிக் சேவிங்ஸ் கணக்குகளுக்கு (BSBDA) பல மாஸான சலுகைகளை ஆர்பிஐ வழங்கியுள்ளது. இதில் அன்லிமிடெட் கேஷ் டெபாசிட் (Unlimited cash deposit), ஆனுவல் மெயின்டெனன்ஸ் சார்ஜ் கிடையாது மற்றும் நெப்ட், ஆர்டிஜிஎஸ் (NEFT, RTGS) போன்றவற்றுக்கு எந்தவிதமான மறைமுகக் கட்டணங்களும் (No hidden charges) இல்லை.
RBI Silver Loan Rules
வெள்ளிக் கடன் விதிமுறைகள்: தங்கத்தைப் போலவே இனி வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களை அடகு வைத்து வங்கிகளில் கடன் பெறலாம். உங்கள் நகையின் மதிப்பில் 85% வரை கடனாகப் பெற முடியும். அதிகபட்சமாக 10 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளி நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என ஆர்பிஐ அதிரடியாக அறிவித்து மக்களை வெச்சி செஞ்சிட்டாங்க.
Income Tax Social Media Check
இன்கம் டாக்ஸ் மற்றும் சோஷியல் மீடியா: நீங்கள் காட்டும் வருமானத்திற்கும், வாழும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை என்றால் வருமான வரித்துறை உங்களை நோட்டம் விடும். அதாவது, நீங்கள் ஐடிஆர் (ITR) குறைவாக பைல் செய்துவிட்டு, சோஷியல் மீடியாவில் விலை உயர்ந்த கார் வாங்கியதாகவோ, வெளிநாடு செல்வதாகவோ பதிவிட்டால் உடனே இன்கம் டாக்ஸ் நோட்டீஸ் (Income tax notice) உங்களைத் தேடி வரும்.
😲 உங்களுக்குத் தெரியுமா? 👉 எல்லா மொபைலிலும் பவர் பட்டன் வலது பக்கம் இருப்பது ஏன்?
Digital Fraud Compensation 2026
டிஜிட்டல் மோசடி இழப்பீடு: ஜூலை 1 முதல், ஆன்லைன் மூலம் உங்கள் பணம் திருடப்பட்டால் அரசாங்கம் உங்களுக்கு இழப்பீடு (Compensation) வழங்கும். இழந்த தொகையில் 85% அல்லது அதிகபட்சமாக ₹25,000 வரை திரும்பப் பெறலாம். மோசடி நடந்த 5 நாட்களுக்குள் வங்கியில் புகார் அளிக்க வேண்டும், மேலும் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இந்த அட்டகாசமான வசதியைப் பெற முடியும்.
