வாங்குனா இந்த Vivo போன் வாங்கனும்! ZEISS லென்ஸுடன் இந்தியாவில் களமிறங்கும் Vivo X300 FE!

ZEISS Telephoto Extender Kit வசதியுடன் 1600mm ஜூமிங் செய்யக்கூடிய புதிய Vivo X300 FE ஸ்மார்ட்போனின் அட்டகாசமான சிறப்பம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி
வாங்குனா இந்த Vivo போன் வாங்கனும்! ZEISS லென்ஸுடன் இந்தியாவில் களமிறங்கும் Vivo X300 FE!, vivo x300 fe smartphone with zeiss telephoto extender kit launch date in india full specifications in tamil

சமீபத்தில் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ எக்ஸ்300 எப்இ (Vivo X300 FE) ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது வரும் மே மாதம் தொடக்கத்தில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் களமிறங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vivo X300 FE Specifications

விவோ எக்ஸ்300 எப்இ அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போனில் கேமரா, பேட்டரி மற்றும் பிராசஸர் என அனைத்துமே பிரீமியம் தரத்தில் (Premium features) கொடுக்கப்பட்டுள்ளது. கேமிங் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றவாறு, வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும் என்று சொல்லும் அளவிற்குச் சிறந்த தொழில்நுட்பத்துடன் இதனை விவோ நிறுவனம் வடிவமைத்துள்ளது.

Vivo X300 FE ZEISS Camera Details

விவோ எக்ஸ்300 எப்இ ஸெய்ஸ் கேமரா விவரங்கள்: இப்போது வெளியான தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் ஆனது பிரீமியம் 200mm லென்ஸான ஸெய்ஸ் டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் கிட் (ZEISS Telephoto Extender Kit) உடன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா (Triple rear camera) அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

Vivo X300 FE Processor and OS

விவோ எக்ஸ்300 எப்இ பிராசஸர் மற்றும் ஓஎஸ்: செயல்திறனைப் பொறுத்தவரை, தரமான 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5 chip) வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்கும் என்பதால், பெரிய கேமிங் ஆப்களைக் கூட எவ்வித தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 மூலம் இந்த போன் இயங்குகிறது.

vivo x300 fe smartphone with zeiss telephoto extender kit launch date in india full specifications in tamil

Vivo X300 FE Display Specs

விவோ எக்ஸ்300 எப்இ டிஸ்ப்ளே அம்சங்கள்: வீடியோ மற்றும் கேமிங் பிரியர்களைக் கவரும் வகையில், இதில் 6.31-இன்ச் எல்டிபிஒ அமோலெட் (LTPO AMOLED display) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் கடுமையான வெயிலிலும் தெளிவாகப் பார்க்க 5000 நிட்ஸ் பிரைட்னஸ் வசதியும் உள்ளது.

Vivo X300 FE Battery and Features

விவோ எக்ஸ்300 எப்இ பேட்டரி மற்றும் அம்சங்கள்: நாள் முழுவதும் தடையின்றி இயங்க இதில் 6500எம்ஏஎச் ராட்சத பேட்டரி (Massive battery) இடம்பெற்றுள்ளது. இதை அதிவேகமாக சார்ஜ் செய்ய 40W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும், IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Water resistance) ஆதரவு மற்றும் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளிட்ட அட்டகாசமான வசதிகளுடன் வாடிக்கையாளர்களை விவோ நிறுவனம் வெச்சி செஞ்சிட்டாங்க.

photos credits: 91mobiles, vivo, Smartprix

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக